2018-ம் ஆண்டுக்கான தமிழ் மொழி மற்றும் இலக்கிய வளர்ச்சிக்கும் தமிழ்ச் சமுதாய உயர்வுக்கும் தொண்டாற்றிப் பெருமை சேர்த்த பேரறிஞர்கள் மற்றும் தன்னலமற்ற தலைவர்கள் பெயரில் தமிழக அரசு விருது அறிவிக்கப்பட்டுள்ளது. 2018-ம் ஆண்டு தமிழக அரசு விருதுகள் தொடர்பான செய்திக்குறிப்பில் கூறப்பட்டுள்ளதாவது:-தமிழ் மொழி மற்றும் இலக்கிய வளர்ச்சிக்கும் தமிழ்ச் சமுதாய உயர்வுக்கும் தொண்டாற்றிப் பெருமை சேர்த்த தமிழ்ப் பேரறிஞர்கள் மற்றும் தன்னலமற்ற தலைவர்கள் பெயரில், தமிழ்நாடு அரசு ஏற்படுத்தியுள்ள திருவள்ளுவர் விருது உள்ளிட்ட கீழ்காணும் விருதுகளைப் பெற்றிட தகுதியான பெருமக்களை தமிழக முதல்வர் எடப்பாடி பழனிசாமி அறிவித்துள்ளார்.
- திருவள்ளுவர் விருது - முனைவர் கோ.பெரியண்ணன்
- தந்தை பெரியார் விருது - பா.வளர்மதி
- அண்ணல் அம்பேத்கர் விருது - டாக்டர் ஜார்ஜ் கே.ஜே
- பேரறிஞர் அண்ணா விருது - அ சுப்பிரமணியன்
- பெருந்தலைவர் காமராஜர் விருது - தா.ரா தினகரன்
- மகாகவி பாரதியார் விருது - முனைவர் சு பாலசுப்பிரமணியன் (எ) பாரதிபாலன்
- பாவேந்தர் பாரதிதாசன் விருது - கே ஜீவபாரதி
- தமிழ்த்தென்றல் திரு.வி.க விருது - எழுத்தாளர் பாலகுமாரன்
- கி.ஆ.பெ விசுவநாதம் விருது - முனைவர் மருதநாயகம்
மேற்காணும் விருதுகள் வரும் 16-ம் தேதி சென்னை கலைவாணர் அரங்கில் வழங்கப்பட உள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
செய்திகள் | G.Os | FLASH NEWS | EDU NEWS | EMPLOYMENT NEWS | TNPSC NEWS | TET NEWS | TRB NEWS | ADMISSION NEWS | ASSEMBLY NEWS | B.ED NEWS | COUNSELLING NEWS | CPS NEWS | COLLEGE NEWS | COURT NEWS | DATE RELATED NEWS | EXAM NEWS | G.O NEWS | G.K NEWS | GPF NEWS | M.ED NEWS | MRB NEWS | NMMS NEWS | NET/SET NEWS | PAY COM NEWS | RESULT NEWS |
- CLASS 10 - SSLC - TENTH STANDARD STUDY MATERIALS | CLICK HERE
- CLASS 11 - PLUS ONE - HSC - ELEVENTH STANDARD STUDY MATERIALS | CLICK HERE
- CLASS 12 - PLUS TWO - HSC - TWELTH STANDARD STUDY MATERIALS | CLICK HERE
- TRB MATERIALS STUDY MATERIALS | CLICK HERE
- TET STUDY MATERIALS | CLICK HERE
- TNPSC STUDY MATERIALS | CLICK HERE
- NEET STUDY MATERIALS | CLICK HERE
- E-BOOK DOWNLOAD | CLICK HERE
- TNPSC ONLINE TEST | CLICK HERE
1 comment:
Avantech provides a wide range of road, runway, airport pavement testing equipment in India at discounted price. https://avantech.in/
Post a Comment