வினா வங்கி
1. இந்தியாவிடம் உள்ள நவீன பிரமோஸ் ஏவுகணை எவ்வளவு தொலைதூர இலக்கை சரியாக தாக்கும்?
2. எல்நினோ மற்றும் சுற்றுச்சூழல் மாற்றங்களுக்கான சிறப்பு பிரதிநிதி களாக ஐ.நா. அவை யாரை நியமித்துள்ளது?
3. இந்தியா உருவாக்கி உள்ள மறுபயன்பாட்டு விண்கலத்தின் பெயர் என்ன?
4. எந்த இந்திய பொதுத்துறை நிறுவனம் ஈரானில் உலோக உற்பத்தி ஆலையை தொடங்க ஒப்பந்தம் மேற்கொண்டுள்ளது?
5. 2016 ஐரோப்பிய லீக் கால்பந்து போட்டி இறுதியாட்டம் எங்கு நடந்தது?
6. உலக நாடுகளில் எந்த கழிவுகளை அதிகமாக வெளியேற்றும் 5-வது நாடாக இந்தியா பதிவாகி உள்ளது?
7. கூகுள் நிறுவனம் ஜாவா காப்புரிமை பிரச்சினையில் எந்த நிறுவனத்திற்கு எதிராக வெற்றி பெற்றது?.
8. என்.எஸ்.ஜி. என்பதன் விரிவாக்கம் என்ன?.
9. ரொட்டி உணவுப் பொருளில் புற்றுநோயை உருவாக்கும் எந்த தாது இருப்பதாக கண்டுபிடிக்கப்பட்டுள்ளது?
10. இந்த ஆண்டு நடந்த உலக சாம்பியன்ஷிப் சைக்கிளிங் பந்தயத்தில் வென்ற நாடு எது?
11. சீனா அடுத்த ஆண்டில் நிலவுக்கு சென்று மாதிரிகளை சேகரித்து திரும்பும் வகையில் ஏவ இருக்கும் விண் கலத்தின் பெயர் என்ன?
12. புதுச்சேரியின் கவர்னராக நியமிக்கப்பட்டுள்ளவர் யார்?
13. 17-வது ஆசிய ஜூனியர் தடகள சாம்பியன்ஷிப் போட்டி எந்த நாட்டில் நடந்தது?
14. மகாராஷ்டிரா மந்திரி ஒருவர் கடந்த ஜூன் மாதம் தனது பதவியை ராஜினாமா செய்தார். அவர் யார்?.
15. சீமா புனியா எந்த விளையாட்டுடன் தொடர்புடையவர்?
16. எவரெஸ்டில் 7-வது முறையாக ஏறி சாதனை படைத்த பெண்மனி யார்?
17. மனித உரிமை குற்றத்தின் கீழ் எந்த நாட்டின் சர்வாதிகாரி சிறையில் அடைக்கப்பட்டார்?
18. பிரெஞ்ச் ஓபன் டென்னிஸ் போட்டியில் ஒற்றையர் ஆட்டத்தில் சாம்பியன் ஆனவர் யார்?
19. உலகின் மிக நீளமான ரெயில்வே குகை எங்கு திறக்கப்பட்டுள்ளது?
20. இந்திய ராணுவத்தின் ஆயுதக் கிடங்கு ஒன்றில் சமீபத்தில் பயங்கர தீவிபத்து ஏற்பட்டது. அது எங்குள்ளது?
விடைகள் :
1. 290 கிலோமீட்டர், 2. மேரி ராபின்சன் (அயர்லாந்து), மக்காரியா காமாவு (கென்யா), 3. RLVTD , 4. இந்திய அலுமினிய நிறுவனம் (நால்கோ), 5. சுவிட்சர்லாந்து, 6. எலக்ட்ரானிக் குப்பைகள், 7. ஆரகிள், 8. நியூக்ளியர் சப்ளையர்ஸ் குரூப், 9. பொட்டாசியம் புரமேட், 10. ஜெர்மனி, 11. சாங்க்-இ 5, 12. கிரண்பேடி, 13. வியட்நாம், 14. ஏக்நாத் காட்ஸி, 15. தட்டு எறிதல் வீராங்கனை, 16. லாக்பா ஷெர்பா, 17. அர்ஜென்டினா, 18. நோவக் டிஜோகோவிக், 19. சுவிட்சர்லாந்து, 20. மகாராஷ்டிராவின், புல்கான்.
No comments:
Post a Comment