TAMIL G.K 1281-1300 | TNPSC | TRB | TET | 95 அறிந்து கொள்ள வேண்டிய பொது அறிவு தகவல்கள் | கல்விச்சோலை தகவல் களஞ்சியம்
1281. 9-ஆம் வகுப்பு | தமிழ் | சீர்கள் பல அடுத்து நடப்பது _____எனப்படும்.
Answer | Touch me
அடி
1282. 9-ஆம் வகுப்பு | தமிழ் | அடியின் வகைகள் யாவை?
Answer | Touch me
குறளடி, சிந்தடி, அளவடி, நெடிலடி, கழிநெடிலடி என ஐவகைப்படும்
1283. 9-ஆம் வகுப்பு | தமிழ் | அடிதோறும் இருசீர்களைப் பெற்று வருவது_____ எனப்படும்.
Answer | Touch me
குறளடி
1284. 9-ஆம் வகுப்பு | தமிழ் | அடிதோறும் முச்சீர்களைப் பெற்று வருவது_____ எனப்படும்.
Answer | Touch me
சிந்தடி
1285. 9-ஆம் வகுப்பு | தமிழ் | அடிதோறும் நான்கு சீர்களைப் பெற்று வருவது_____ ஆகும்.
Answer | Touch me
அளவடி அல்லது நேரடி
1286. 9-ஆம் வகுப்பு | தமிழ் | அடிதோறும் ஐந்து சீர்களைப் பெற்று வருவது_____ ஆகும்.
Answer | Touch me
நெடிலடி
1287. 9-ஆம் வகுப்பு | தமிழ் | அடிதோறும் ஆறு அல்லது அதற்கு மேற்கண்ட பல சீர்களைப் பெற்று வருவதைக் _____ எனக் கூறுவர்.
Answer | Touch me
கழிநெடிலடி
1288. 9-ஆம் வகுப்பு | தமிழ் | மலர்களைத் தொடுப்பது போலவே சீர்களிலும் அடிகளிலும் மோனை முதலியன அமையத் தொடுப்பது _____ எனப்படும்.
Answer | Touch me
தொடை
1289. 9-ஆம் வகுப்பு | தமிழ் | தொடை எத்தனை வகைப்படும்?
Answer | Touch me
எட்டு
1290. 9-ஆம் வகுப்பு | தமிழ் | செய்யுளில் அடிதோறும் முதல் எழுத்து ஒன்றிவரத் தொடுப்பது_____ எனப்படும்.
Answer | Touch me
அடிமோனைத் தொடை
1291. 9-ஆம் வகுப்பு | தமிழ் | அடிதோறும் முதலெழுத்து அளவொத்து நிற்க, இரண்டாம் எழுத்து ஒன்றிவரத் தொடுப்பது_____ எனப்படும்.
Answer | Touch me
அடியெதுகைத் தொடை
1292. 9-ஆம் வகுப்பு | தமிழ் | அடிதோறும் முதற்சீர் முரண்படத் தொடுப்பது _____ எனப்படும்.
Answer | Touch me
அடிமுரண் தொடை
1293. 9-ஆம் வகுப்பு | தமிழ் | அடிதோறும் இறுதிச்சீர் ஒன்றிவரத் தொடுப்பது_____ எனப்படும்.
Answer | Touch me
அடிஇயைபுத் தொடை
1294. 9-ஆம் வகுப்பு | தமிழ் | அடிதோறும் முதல் சீர் அளபெடுத்து வருவது_____ எனப்படும.;
Answer | Touch me
அடியளபெடைத் தொடை
1295. 9-ஆம் வகுப்பு | தமிழ் | தொடை விகற்பம் எத்தனை வகைப்படும்?
Answer | Touch me
முப்பத்தைந்து
1296. 9-ஆம் வகுப்பு | தமிழ் | நான்கு சீர்களையுடைய ஓரடியில் பொழிப்பு, ஒரூஉ, கூழை, மேற்கது வாய், கீழ்க்கதுவாய், முற்று ஆகியன வரத்தொடுப்பது எது?
Answer | Touch me
தொடை விகற்பம்
1297. 9-ஆம் வகுப்பு | தமிழ் | நாலடி கொண்ட சீருள் முதலிரு சீர்களில் முதலெழுத்து ஒன்றிவரத் தொடுப்பது_____எனப்படும்.
Answer | Touch me
இணைமோனை
1298. 9-ஆம் வகுப்பு | தமிழ் | ஓர் அடியின் முதற்சீரிலும் மூன்றாம் சீரிலும் முதலெழுத்து ஒத்து வருவது _______ எனப்படும்.
Answer | Touch me
பொழிப்பு மோனை
1299. 9-ஆம் வகுப்பு | தமிழ் | ஓர் அடியின் முதற்சீரிலும் நான்காம் சீரிலும் முதலெழுத்து ஒன்றிவரத் தொடுப்பது _______ எனப்படும்.
Answer | Touch me
ஒரூஉ மோனை
1300. 9-ஆம் வகுப்பு | தமிழ் | ஓர் அடியின் முதல், இரண்டு, மூன்றாம் சீர்களில் முதலெழுத்து ஒன்றி வருவது _______ எனப்படும்.
Answer | Touch me
கூழைமோனை
No comments:
Post a Comment