TAMIL G.K 1541-1560 | TNPSC | TRB | TET | 108 அறிந்து கொள்ள வேண்டிய பொது அறிவு தகவல்கள் | கல்விச்சோலை தகவல் களஞ்சியம்
1541. 10-ஆம் வகுப்பு | தமிழ் |தனக்கு ஐயமாக இருக்கின்ற ஒருபொருள் குறித்து, ஐயத்தைப் போக்கி கொள்வதற்காக வினவப்படும் வினா_____ ஆகும்.
Answer | Touch me
ஐயவினா
1542. 10-ஆம் வகுப்பு | தமிழ் |தான் ஒரு பொருளை வாங்கிக் கொள்ளும் பொருட்டுக் கடைக்காரரிடம் வினவும் வினா _____ஆகும்.
Answer | Touch me
கொளல்வினா
1543. 10-ஆம் வகுப்பு | தமிழ் |தான் ஒரு பொருளைக் கொடுப்பதற்காக, அப்பொருள் இருத்தலைப் பற்றிப் பிறரிடம் வினவுவது_____ ஆகும்.
Answer | Touch me
கொடைவினா
1544. 10-ஆம் வகுப்பு | தமிழ் |ஒரு தொழிலைச் செய்யும்படி ஏவும் வினா_____ ஆகும்
Answer | Touch me
ஏவல் வினா
1545. 10-ஆம் வகுப்பு | தமிழ் |இறை, செப்பு, பதில், என்பன எதன் வேறு பெயர்கள்?
Answer | Touch me
விடையின் வேறுபெயர்கள்
1546. 10-ஆம் வகுப்பு | தமிழ் |விடை எத்தனை வகைப்படும்?
Answer | Touch me
எட்டு
1547. 10-ஆம் வகுப்பு | தமிழ் |“இது” என்பது போலச் சுட்டிக் கூறும் விடை_____ ஆகும்.
Answer | Touch me
சுட்டுவிடை
1548. 10-ஆம் வகுப்பு | தமிழ் |“இது செய்வாயா?” என்று வினவியபோது “செய்யேன்” என்பது போல எதிர்மறுத்துக் கூறும் விடை _____ ஆகும்.
Answer | Touch me
எதிர்மறை விடை
1549. 10-ஆம் வகுப்பு | தமிழ் |“இது செய்வாயா?” என்று வினவியபோது, செய்வேன்” என்று உடன் பட்டுக்கூறும் விடை_____ ஆகும்.
Answer | Touch me
நேர்விடை
1550. 10-ஆம் வகுப்பு | தமிழ் |“இது செய்வாயா?” என வினவிய போது “நீயே செய்” என்று ஏவிக்கூறுவது _____ ஆகும்.
Answer | Touch me
ஏவல் விடை
1551. 10-ஆம் வகுப்பு | தமிழ் |“இது செய்வாயா?” என்று வினவிய போது, “செய்யாமலிருப்பேனோ?” என்று வினாவையே விடையாகக் கூறுவது _____ ஆகும்.
Answer | Touch me
வினா எதிர்வினாதல் விடை
1552. 10-ஆம் வகுப்பு | தமிழ் |“இது செய்வாயா?” என்று வினவியபோது, “உடம்பு நொந்தது” என்று தனக்கு உற்றதை விடையாகக் கூறுவது_____ ஆகும்.
Answer | Touch me
உற்றதுரைத்தல் விடை
1553. 10-ஆம் வகுப்பு | தமிழ் |“இது செய்வாயா?” என்னும் வினாவிற்குக் “கைவலிக்கும்” எனத் தனக்கு வரப்போவதை விடையாகக் கூறுவது______ ஆகும்.
Answer | Touch me
உறுவது கூறல் விடை
1554. 10-ஆம் வகுப்பு | தமிழ் |“ஆடுவாயா?” என்று வினவியபோது, பாடுவேன் என ஆடுவதற்கு இனமான பாடுவதை விடையாகக் கூறுவது _____ ஆகும்.
Answer | Touch me
இனமொழிவிடை
1555. 10-ஆம் வகுப்பு | தமிழ் |ஒரு பொருளையே தரும் பல சொற்கள் தொடர்வது _____ ஆகும்.
Answer | Touch me
ஒரு பொருட் பன்மொழியாகும்
1556. 10-ஆம் வகுப்பு | தமிழ் |“151”-இன் தமிழெண் எது?
Answer | Touch me
“கருக”
1557. 10-ஆம் வகுப்பு | தமிழ் |“161”-இன் தமிழெண் எது?
Answer | Touch me
“கசாக”
1558. 10-ஆம் வகுப்பு | தமிழ் |“171”-இன் தமிழெண் எது?
Answer | Touch me
“கஎக”
1559. 10-ஆம் வகுப்பு | தமிழ் |“181”-இன் தமிழெண் எது?
Answer | Touch me
“கஅக”
1560. 10-ஆம் வகுப்பு | தமிழ் |“191”-இன் தமிழெண் எது?
Answer | Touch me
ககூக
No comments:
Post a Comment