TAMIL G.K 1841-1860 | TNPSC | TRB | TET | அறிந்து கொள்ள வேண்டிய பொது அறிவு தகவல்கள் | கல்விச்சோலை தகவல் களஞ்சியம்
1841. 10-ஆம் வகுப்பு | தமிழ் |“மனிதனின் நோக்கம் உயர்ந்ததாகவும், தூய்மையானதாகவும் இருந்தால் மட்டும் போதாது, அதை அடையும் வழிமுறைகளும் தூய்மையானதாகப் பிறருக்குத் துன்பம் தராததாக இருக்க வேண்டும்” இது யார் கூற்று?
Answer | Touch me
காந்தியடிகள்
1842. 10-ஆம் வகுப்பு | தமிழ் |காந்தியின் மனைவி பெயர் என்ன?
Answer | Touch me
கஸ்தூரிபாய்காந்தி
1843. 10-ஆம் வகுப்பு | தமிழ் |பகட்டான வாழ்க்கையைப் பாவம் என்று கருதியவர் யார்?
Answer | Touch me
அண்ணல் காந்தியடிகள்
1844. 10-ஆம் வகுப்பு | தமிழ் |காந்தியடிகளை அரை நிர்வாணப்பக்கிரி என்று அழைத்தவர் யார்?
Answer | Touch me
அப்போதைய இங்கிலாந்து பிரதமராக இருந்த சர்ச்சில் கூறினார்
1845. 10-ஆம் வகுப்பு | தமிழ் |மனிதரோடு மனிதராக வாழ்ந்து, மனிதருக்காக வாழ்ந்து, “மகாத்மா”வாக உயரமுடியும் என்பதை மெய்ப்பித்தவர் யார்?
Answer | Touch me
காந்தியடிகள்
1846. 10-ஆம் வகுப்பு | தமிழ் |“நான் குஜராத்தியனாக இருப்பதைக் காட்டிலும், இந்தியனாக இருப்பதைக் காட்டிலும் மனிதனாக இருப்பதே பெருமைக்குரியது என்று எண்ண வேண்டும்” என்று கூறியவர் யார்?
Answer | Touch me
காந்தியடிகள்
1847. 10-ஆம் வகுப்பு | தமிழ் |தென் ஆப்பிரிக்காவில் எதைக் காந்தியடிகள் கொளுத்தியதால் சிறையில் அடைக்கப்பட்டார்?
Answer | Touch me
இந்தியருக்கு எதிரான கறுப்புச் சட்டங்களை கொளுத்தியதால்
1848. 10-ஆம் வகுப்பு | தமிழ் |காந்திஜி சிறையில் தான் தைத்த செருப்பை யாருக்கு அன்பளிப்பாக கொடுத்தார்?
Answer | Touch me
தன்னை சிறையிலடைத்த ஆளுநர் ஸ்மட்ஸீக்கு கொடுத்தார்.
1849. 10-ஆம் வகுப்பு | தமிழ் |காந்திஜி கொடுத்த செருப்புக்காக ஸ்மட்ஸ் காந்திஜிக்கு என்ன பரிசைக் கொடுத்தார்?
Answer | Touch me
இரண்டு பைபிள் சார்ந்த நூல்கள்
1850. 10-ஆம் வகுப்பு | தமிழ் |காந்திஜி எப்போது சுட்டுக் கொல்லப்பட்டார்?
Answer | Touch me
கி.பி.1948–ஆம் ஆண்டு சனவரி 31.
1851. 10-ஆம் வகுப்பு | தமிழ் |“இந்தியாவின் வாழ்வு என்பது இலட்சக்கணக்கான கிராமங்களின் வாழ்வுதான், அந்தக் கிராமங்களின் வாழ்வு, அந்த நாட்டின் உழவர்கள், இளைஞர்கள் ஆகியோர் கைகளில் தான் உள்ளது”. இது யாருடைய கூற்று?
Answer | Touch me
காந்தியடிகள்
1852. 10-ஆம் வகுப்பு | தமிழ் |பகைவனிடமும் அன்பு காட்டு எனக் கூறிய நூல் எது?
Answer | Touch me
பைபிள்
1853. 10-ஆம் வகுப்பு | தமிழ் |“தன்னாட்;டுப் பொருள் இயக்கமான சுதேசி இயக்கத்தை வளர்க்கும் கடமை இளைஞர்களுக்கே உரியது” என்று கூறியவர் யார்?
Answer | Touch me
காந்தியடிகள்
1854. 10-ஆம் வகுப்பு | தமிழ் |வீட்டுக்குள் முடங்கிக் கிடந்த பெண்களையும் சமூக நீதிக்கான போராளிகளாக ஆக்கியவர் யார்?
Answer | Touch me
காந்தியடிகள்.
1855. 10-ஆம் வகுப்பு | தமிழ் |அகப்பொருள் வாழ்வியல் எனில், புறப்பொருள் _____ ஆகும்.
Answer | Touch me
உலகியல்
1856. 10-ஆம் வகுப்பு | தமிழ் |புறத்திணைகள் எத்தனை வகைப்படும்?
Answer | Touch me
பன்னிரண்டு
1857. 10-ஆம் வகுப்பு | தமிழ் |பகை நாட்டின் மீது போர் தொடங்கு முன், அந்நாட்டிலுள்ள ஆநிரைகளுக்குத் தீங்கு நேரக்கூடாது எனக் கருதும் மன்னன், தன் வீரர்களை அனுப்பி அவற்றை கவர்ந்து வரச் செய்வது _______ எனப்படும்.
Answer | Touch me
வெட்சித்திணை
1858. 10-ஆம் வகுப்பு | தமிழ் |வெட்சி வீரர்களால் கவர்ந்து செல்லப்பட்ட தம் ஆநிரைகளைக் கரந்தைப் பூவைச் சூடிச் சென்று மீட்பது, _____ எனப்படும்.
Answer | Touch me
கரந்தைத் திணை
1859. 10-ஆம் வகுப்பு | தமிழ் |மண்ணாசை காரணமாகப் பகைவர் நாட்டைக் கைப்பற்றக் கருதி வஞ்சிப்பூவைச் சூடிப் போருக்குச் செல்வது _____ ஆகும்.
Answer | Touch me
வஞ்சித்திணை
1860. 10-ஆம் வகுப்பு | தமிழ் |தன் நாட்டைக் கைப்பற்ற வந்த மாற்றரசனோடு காஞ்சிப் பூவைச்சூடி எதிர்த்துப் போரிடல் _____ஆகும்.
Answer | Touch me
காஞ்சித்திணை
No comments:
Post a Comment