Wednesday, July 17, 2013

TAMIL G.K 1861-1880 | TNPSC | TRB | TET | 124 அறிந்து கொள்ள வேண்டிய பொது அறிவு தகவல்கள் | கல்விச்சோலை தகவல் களஞ்சியம்

TAMIL G.K 1861-1880 | TNPSC | TRB | TET | 124 அறிந்து கொள்ள வேண்டிய பொது அறிவு தகவல்கள் | கல்விச்சோலை தகவல் களஞ்சியம்

1861. 10-ஆம் வகுப்பு | தமிழ் |பகையரசனால் முற்றுகையிடப்பட்ட தம் மதிலைக் காத்தல் வேண்டி, உள்ளிருந்தே, வெளியே இருக்கும் பகையரசனோடு நொச்சிப் பூவைச் சூடிப் போரிட்டு, அம்மதிலைக் காப்பது _____ ஆகும்.

Answer | Touch me நொச்சித்திணை


1862. 10-ஆம் வகுப்பு | தமிழ் |உழிஞைப் பூவைச் சூடிய தன் வீரர்களுடன் மாற்றரசன் கோட்டைக்குள் புகுந்து மதிலைக் கைப்பற்றுதல் _____ ஆகும்.

Answer | Touch me உழிஞைத்திணை


1863. 10-ஆம் வகுப்பு | தமிழ் |பகை வேந்தர் இருவரும் வெற்றி ஒன்றையே குறிக்கோளாகக் கொண்டு தம் வீரர்களுடன் போரிடுவது _____ ஆகும்.

Answer | Touch me தும்பைத்திணை


1864. 10-ஆம் வகுப்பு | தமிழ் |வெற்றி பெற்ற மன்னன் வாகைப்பூச் சூடி மகிழ்வது _____ஆகும்.

Answer | Touch me வாகைத்திணை


1865. 10-ஆம் வகுப்பு | தமிழ் |பாடுவதற்குத் தகுதியுடைய ஓர் ஆண் மகனின் கல்வி, வீரம், செல்வம், புகழ், கருணை முதலியவற்றைப் போற்றிப் பாடுவது_____ ஆகும்.

Answer | Touch me பாடாண்திணை


1866. 10-ஆம் வகுப்பு | தமிழ் |வெட்சி முதல் பாடாண் வரை உள்ள புறத்திணைகளின் பொதுவானவற்றையும், அவற்றுள் கூறப்படாதனவற்றையும் கூறுவது _____ ஆகும்.

Answer | Touch me பொதுவியல்திணை


1867. 10-ஆம் வகுப்பு | தமிழ் |கைக்கிளை என்பது ஒருதலைக் காமம். இஃது ஆண்பால் கூற்று, _____ கூற்று என இரு வகைப்படும்.

Answer | Touch me பெண்பால்


1868. 10-ஆம் வகுப்பு | தமிழ் |_____ என்பது பொருந்தாக் காமம், இதுவும் ஆண்பாற் கூற்று, பெண்பாற் கூற்று என இருவகைப்படும்.

Answer | Touch me பெருந்திணை


1869. 10-ஆம் வகுப்பு | தமிழ் |நிரை கவர்தல் என்பது _____ ஆகும்.

Answer | Touch me வெட்சி


1870. 10-ஆம் வகுப்பு | தமிழ் |பொருள்களை என்னும் நிலை, விளி, வினையெச்சம், மேற்கோள் குறிகளுக்கு முன், ஆதலால், ஆகவே முதலிய சொற்களின் பின், முகவரியில் இறுதி வரி தவிர்த்த பிற இடங்களில் _____ இட வேண்டும்.

Answer | Touch me காற்புள்ளி (,)


1871. 10-ஆம் வகுப்பு | தமிழ் |ஒரே எழுவாயில் பல தொடர்கள் தொடர்ந்து வருகின்ற இடங்களிலும், ஒரே எழுவாய்க்குரிய உடன்பாட்டுக் கருத்தும் எதிர்மறைக் கருத்தும் தொடர்ந்து வருகின்ற இடங்களிலும் _____இட வேண்டும்.

Answer | Touch me அரைப்புள்ளி (;)


1872. 10-ஆம் வகுப்பு | தமிழ் |ஒருவர் கூற்றை விளக்குதல், சிறுதலைப்பு நூற்பகுதி எண் முதலியன விவரங்களைப் பட்டியல் முறையில் ஒன்றன் பின் ஒன்றாகத் தரும்போது _____ இடவேண்டும்.

Answer | Touch me முக்காற்புள்ளி (:)


1873. 10-ஆம் வகுப்பு | தமிழ் |சொற்றொடர் இறுதி, முகவரி இறுதி, நாள் இறுதி, சொற்குறுக்கம், கையெழுத்து முதலிய இடங்களில் _____ இடப்படும்.

Answer | Touch me முற்றுப்புள்ளி (.)


1874. 10-ஆம் வகுப்பு | தமிழ் |ஒரு வினாத்தொடர் முற்றுத் தொடராகவும் நேர்க்கூற்றுத் தொடராகவும் இருப்பின், இறுதியில் _______ இட வேண்டும்.

Answer | Touch me வினாக்குறி (?)


1875. 10-ஆம் வகுப்பு | தமிழ் |வியப்பு, அவலம், வாழ்த்து, வரவேற்றல், வைதல் ஆகிய உணர்ச்சிகளை வெளிப்படுத்தும் தொடர்களின் பின் _____ குறி இடவேண்டும்.

Answer | Touch me உணர்ச்சிக்குறி (!)


1876. 10-ஆம் வகுப்பு | தமிழ் |தற்சுட்டின் கண்ணும், பிறர் கூற்றாக வரும் இடத்தும், கட்டுரைப்பெயரும், நூற்பெயர் வருமிடத்துடத்தும் _____ குறி வரும்.

Answer | Touch me ஒற்றை மேற்கோள்குறி (‘’)


1877. 10-ஆம் வகுப்பு | தமிழ் |நேர்க்கூற்றுத் தொடர்களிலும் மேற்கோள் தொடர்களிலும் _____ குறிஇட வேண்டும்.

Answer | Touch me இரட்டை மேற்கோள்குறி (“ ”)


1878. பண்டைக் காலத்தில் புறா, கிளி, நாய் முதலியவற்றின் மூலமாகக் கடிதப்போக்குவரத்து நடைபெற்றது. இதனைத் _____என்பர்.

Answer | Touch me தூது


1879. 10-ஆம் வகுப்பு | தமிழ் |பாடல்கள் மூலமாகக் கடிதம் எழுதுவதற்கு பெயர் என்ன?

Answer | Touch me சீட்டுக்கவி


1880. 10-ஆம் வகுப்பு | தமிழ் |உலகின் முதல் மாந்தரினம் வாழ்ந்த பகுதி என்று திருவள்@ர் பக்கத்தில் உள்ள எந்த ஊரை தொல்லியலார் குறிப்பிடுகின்றனர்?

Answer | Touch me கூடியம்.






No comments:

Popular Posts