TAMIL G.K 0611-0630 | TNPSC | TRB | TET | 61 அறிந்து கொள்ள வேண்டிய பொது அறிவு தகவல்கள் | கல்விச்சோலை தகவல் களஞ்சியம்
611. 8-ஆம் வகுப்பு | தமிழ் |க.சச்சிதானந்தன் எங்கு பிறந்தார்?
Answer | Touch me
இலங்கை யாழ்ப்பாண மாவட்டத்திலுள்ள பருத்தித்துறை
612. 8-ஆம் வகுப்பு | தமிழ் |ஆனந்தத்தேன், அன்னபூரணி, யாழ்ப்பாணக் காவியம் ஆகிய நூல்களின் ஆசிரியர் யார்?
Answer | Touch me
க. சச்சிதானந்தன்
613. 8-ஆம் வகுப்பு | தமிழ் |மகாவித்துவான் நவநீதகிருட்டின பாரதியாரின் மாணவர் யார்?
Answer | Touch me
க. சச்சிதானந்தன்
614. 8-ஆம் வகுப்பு | தமிழ் |க. சச்சிதானந்தன் பாடல்களில் பாரதியின் சினப்போக்கையும் யாருடைய மிடுக்கையும் ஒருமித்துக் காணலாம்?
Answer | Touch me
கம்பன்
615. 8-ஆம் வகுப்பு | தமிழ் |_______ என்னும் இருசொற்களின் சேர்க்கையே அகராதி என்றானது.
Answer | Touch me
அகரம், ஆதி
616. 8-ஆம் வகுப்பு | தமிழ் |அகராதி என்னும் சொல் தற்போதைய வழக்கில் எவ்வாறு வழங்கப்படுகிறது?
Answer | Touch me
அகரமுதலி
617. 8-ஆம் வகுப்பு | தமிழ் |தமிழ் அகரமுதலி வரலாற்றில், செம்பாதி இடத்தைப் பெறும் சொற்பொருள் துறை நூல்கள் _______ ஆகும்.
Answer | Touch me
நிகண்டுகள்
618. 8-ஆம் வகுப்பு | தமிழ் |நிகண்டுகளில் பழமையானது எது?
Answer | Touch me
சேந்தன் திவாகரம்
619. 8-ஆம் வகுப்பு | தமிழ் | சேந்தன் திவாகரத்தின் ஆசிரியர் யார்?
Answer | Touch me
திவாகரர்
620. 8-ஆம் வகுப்பு | தமிழ் |இருபத்தைந்து நிகண்டுகளில் சிறப்பானது எது?
Answer | Touch me
சூடாமணி நிகண்டு
621. 8-ஆம் வகுப்பு | தமிழ் |போர்ச்சுகீசிய - இலத்தீன் - தமிழ் அகராதியை உருவாக்கியவர் யார்?
Answer | Touch me
வீரமாமுனிவர்
622. 8-ஆம் வகுப்பு | தமிழ் |சூடாமணி நிகண்டின் ஆசிரியர் யார்?
Answer | Touch me
மண்டலபுருடர்
623. 8-ஆம் வகுப்பு | தமிழ் |யாருடைய நூலில் “அகராதி” என்ற சொல் முதன்முதலில் இடம் பெற்றுள்ளது?
Answer | Touch me
திருமூலரின் திருமந்திரம்
624. 8-ஆம் வகுப்பு | தமிழ் |தமிழில் தோன்றிய முதல் அகரமுதலி எது?
Answer | Touch me
வீரமாமுனிவர் தொகுத்த சதுரகராதி
625. 8-ஆம் வகுப்பு | தமிழ் |முதல் அகரமுதலி எந்த ஆண்டு வெளிவந்தது?
Answer | Touch me
கி.பி. 1732-ஆம் ஆண்டு.
626. 8-ஆம் வகுப்பு | தமிழ் |“சதுர்” என்பதற்கு பொருள் என்ன?
Answer | Touch me
நான்கு
627. 8-ஆம் வகுப்பு | தமிழ் |தமிழ் – இலத்தீன் அகராதி, இலத்தீன் – தமிழ் அகராதி, தமிழ் – பிரெஞ்சு அகராதி, பிரெஞ்சு – தமிழ் அகராதி, ஆகிய அகர முதலிகளை உருவாக்கியவர் யார்?
Answer | Touch me
வீரமாமுனிவர்
628. 8-ஆம் வகுப்பு | தமிழ் |தமிழ்-தமிழ் அகராதி யாரால் வெளியிடப்பட்டது?
Answer | Touch me
லெவி-ஸ்பால்டிஸ்
629. 8-ஆம் வகுப்பு | தமிழ் |யாரால் தமிழ்ச் சொல்லகராதி வெளியிடப்பட்டது?
Answer | Touch me
யாழ்ப்பாணம் கதிர்வேலனார்
630. 8-ஆம் வகுப்பு | தமிழ் |“இருபதாம் நூற்றாண்டுத் தமிழ் அகராதி” (படங்களுடன்) என்பது யாரால் வெளியிடப்பட்டது?
Answer | Touch me
இராமநாதன்
No comments:
Post a Comment