Monday, June 17, 2013

TAMIL G.K 0941-0960 | TNPSC | TRB | TET | 78 அறிந்து கொள்ள வேண்டிய பொது அறிவு தகவல்கள் | கல்விச்சோலை தகவல் களஞ்சியம்

TAMIL G.K 0941-0960 | TNPSC | TRB | TET | 78 அறிந்து கொள்ள வேண்டிய பொது அறிவு தகவல்கள் | கல்விச்சோலை தகவல் களஞ்சியம்

941. 9-ஆம் வகுப்பு | தமிழ் |இன்பத்துப் பாலில் உள்ள அதிகாரங்கள் எத்தனை?

Answer | Touch me 25 அதிகாரங்கள்


942. 9-ஆம் வகுப்பு | தமிழ் |திருக்குறளுக்கு அந்நாளிலேயே பதின்மர் உரை எழுதியதில் சிறந்த உரை எது?

Answer | Touch me பரிமேலழகர் உரை


943. 9-ஆம் வகுப்பு | தமிழ் |திருக்குறளுக்கு அந்நாளில் உரை எழுதிய பதின்மர் யார்?

Answer | Touch me 1. தருமர், 2. மணக்குடவர், 3. தாமத்தர், 4. நச்சர், 5. பரிதி, 6. பரிமேலழகர், 7. திருமலையர், 8. மல்லர், 9. பரிப்பெருமாள், 10. காளிங்கர்


944. 9-ஆம் வகுப்பு | தமிழ் |விக்டோரியா மகாராணியார் காலையில் கண்விழித்ததும் முதலில் படித்த நூல் எது?

Answer | Touch me திருக்குறள்


945. 9-ஆம் வகுப்பு | தமிழ் |நம் நாட்டில் எத்தனைக்கு மேற்பட்ட மொழிகள் பேசப்படுகின்றன?

Answer | Touch me 1300 மொழிகள்


946. 9-ஆம் வகுப்பு | தமிழ் |“மொழிகளின் காட்சிச்சாலை” என்று எந்த நாட்டை மொழியில்; பேராசிரியர் ச.அகத்தியலிங்கம் குறிப்பிடுகிறார்?

Answer | Touch me இந்தியா


947. 9-ஆம் வகுப்பு | தமிழ் |இன்று உள்ள திராவிட மொழிகளின் எண்ணிக்கை எவ்வளவு?

Answer | Touch me 23-க்கும் மேல் உள்ளன


948. 9-ஆம் வகுப்பு | தமிழ் |திராவிட மொழிகளை எத்தனை வகையாக பிரிப்பர்?

Answer | Touch me 1. தென் திராவிட மொழிகள் 2. நடுத்திராவிட மொழிகள் 3. வட திராவிட மொழிகள்


949. 9-ஆம் வகுப்பு | தமிழ் |தென் திராவிட மொழிகள் யாவை?

Answer | Touch me தமிழ், மலையாளம், கன்னடம், குடகு, துளு, தோடா, கோத்தா, கொரகா, இருளா


950. 9-ஆம் வகுப்பு | தமிழ் |நடுத்தி;ராவிட மொழிகள் எத்தனை உள்ளன?

Answer | Touch me தெலுங்கு, கோண்டி, கோயா, கூயி, கூவி, கோலாமி, பர்ஜி, கதபா, கோண்டா, நாயக்கி, பெங்கோ, ஜதபு


951. 9-ஆம் வகுப்பு | தமிழ் | வட திராவிட மொழிகள் யாவை?

Answer | Touch me குரூக், மால்தோ, பிராகுய்


952. 9-ஆம் வகுப்பு | தமிழ் |தமிழ், தெலுங்கு, மலையாளம், கன்னடம் ஆகிய நான்கும் எவ்வாறு அழைக்கப்படுகிறது?

Answer | Touch me திராவிடப் பெருமொழிகள்


953. 9-ஆம் வகுப்பு | தமிழ் |“திராவிடம்” என்பதன் பொருள் யாது?

Answer | Touch me திராவிட நாடு


954. 9-ஆம் வகுப்பு | தமிழ் | “திராவிட மொழிகளின் ஒப்பிலக்கணம்” எனும் நூலின் ஆசிரியர் யார்?

Answer | Touch me கால்டுவெல்


955. 9-ஆம் வகுப்பு | தமிழ் |தமிழையும் அதன் கிளை மொழிகளான மலையாளம், தெலுங்கு, கன்னடம் ஆகிய தென்னிந்திய மொழிகளை எவ்வாறு அழைத்தனர்?

Answer | Touch me தமிளியன் அல்லது தமுலிக்


956. 9-ஆம் வகுப்பு | தமிழ் |அழிந்து வரும் பண்டையத் தமிழ் ஓலைச்சுவடிகளைப் புதுப்பித்துப் பாதுகாக்க பல நடவடிக்கைகளை எது மேற்கொண்டு வருகிறது?

Answer | Touch me யுனெஸ்கோ நிறுவனம்


957. 9-ஆம் வகுப்பு | தமிழ் | கடல் கோளால் கொள்ளப்பட்ட பழந்தமிழ்க் குமரிக்கண்டம் எது?

Answer | Touch me இலெமூரியாக்கண்டம்


958. 9-ஆம் வகுப்பு | தமிழ் |“திராவிட” எனும் சொல் எந்த சொல்லிலிருந்து உருவானது?

Answer | Touch me தமிழ்


959. 9-ஆம் வகுப்பு | தமிழ் |“திராவிட” என்ற சொல் “தமிழ்” என்ற சொல்லிலிருந்து உருவானதாக கூறிய மொழியியல் அறிஞர் யார்?

Answer | Touch me ஈராஸ் பாதிரியார்


960. 9-ஆம் வகுப்பு | தமிழ் |தமிழ் மொழியில் இன்று நமக்குக் கிடைத்துள்ள நூல்களுள் மிகப் பழமையானது எது?

Answer | Touch me தொல்காப்பியம்






No comments:

Popular Posts