- புதிய மாநில கல்விக்கொள்கையை வடிவமைக்க ஓய்வுபெற்ற நீதிபதி முருகேசன் தலைமையில் 14 பேர் கொண்ட குழுவை 2022ம் ஆண்டு தமிழக அரசு அமைத்தது. அந்த குழு தயார் செய்த அறிக்கையில், தமிழ், ஆங்கிலம் என இருமொழிக் கொள்கையை பின்பற்ற வேண்டும், தேசிய கல்விக் கொள்கையில் தெரிவித்தபடி 3, 5, 8ம் வகுப்புகளுக்கு பொதுத்தேர்வு நடத்த தேவையில்லை, கல்வியை மாநில பட்டியலுக்கு கொண்டுவர வேண்டும் என்பது உள்பட பல்வேறு பரிந்துரைகள் இடம்பெற்றன. (ஜூலை 1)
- சென்னை கிண்டி கலைஞர் நூற்றாண்டு உயர் சிறப்பு ஆஸ்பத்திரியில் ரூ,14,25 கோடி மதிப்பீட்டில் அதிநவீன மருத்துவ உபகரணங்கள் மற்றும் யுனானி மருத்துவ பிரிவை மக்கள் நல்வாழ்வுத்துறை அமைச்சர் மா.சுப்பிரமணியன் தொடங்கி வைத்தார். (ஜூன் 30)
- கனடாவின் ராணுவ தளபதியாக இருந்து வரும் வெய்ன் அயர் விரைவில் ஓய்வு பெற உள்ளதை அடுத்து புதிய ராணுவ தளபதியாக மூத்த பெண் ராணுவ அதிகாரி ஜென்னி கரிக்னன் நியமிக்கப்பட்டார். இதன்மூலம், கனடா வரலாற்றில் ராணுவ தளபதியாகும் முதல் பெண் என்ற பெருமையை ஜென்னி கரிக்னன் பெற்றார். (ஜூலை 4)
- இங்கிலாந்தில் நடைபெற்ற நாடாளுமன்ற தேர்தலில், ரிஷி சுனக் தலைமையிலான ஆளும் கட்சியான கன்சர்வேட்டிவ் கட்சி 121 இடங்களை மட்டுமே கைப்பற்றியது. எதிர்க்கட்சியான தொழிலாளர் கட்சி 412 இடங்களை கைப்பற்றி வெற்றி பெற்றது. இதையடுத்து தொழிலாளர் கட்சியின் தலைவரான கீர் ஸ்டார்மர் இங்கிலாந்தின் புதிய பிரதமராக பதவியேற்றார். இந்த தேர்தலில் இலங்கையை பூர்வீகமாக கொண்ட உமா குமரன் என்ற தமிழ்ப் பெண் வெற்றி பெற்று, இங்கிலாந்து நாடாளுமன்றத்தின் முதல் தமிழ் பெண் எம் பி என்ற சாதனையைப் படைத்தார். (ஜூலை 5)
- இந்தியாவில் ஆங்கிலேயர்கள் ஆட்சி செய்தபோது, குற்றங்களில் ஈடுபடுபவர்களுக்கு தண்டனை கொடுக்கும் விதமாக இந்திய தண்டனை சட்டம் (ஐ பி சி ), குற்றவியல் நடைமுறை சட்டம் (சி ஆர் பி சி ), இந்திய சாட்சியங்கள் சட்டம் (ஐ இ சி ) என 3 விதமான சட்டங்கள் இருந்தன. அதற்கு பதிலாக தற்போது பாரதிய நியாய சன்ஹிதா (பி என் எஸ் ), பாரதிய நாகரிக் சுரக் ஷா சன்ஹிதா (பி என் எஸ் எஸ் ), பாரதிய சாட்சிய அதினியம் என்ற புதிய 3 குற்றவியல் சட்டங்கள் நடைமுறைக்கு கொண்டுவரப்பட்டன. இவை, குற்றங்களுக்கு அதிகபட்ச தண்டனை வழங்கவும், போலீஸ் நிலையங்களை சாமானியர்கள் எளிதில் அணுகுவதற்கும் வழிவகை செய்கின்றன. (ஜூலை 1)
- இந்திய ராணுவ தலைமை தளபதியாக இருந்த மனோஜ் பாண்டேயின் பதவிக்காலம் முடிந்ததை அடுத்து புதிய ராணுவ தலைமை தளபதியாக உபேந்திர திவேதி பொறுப்பேற்றார். இவர் இந்திய ராணுவத்தின் 30வது தலைமை தளபதி ஆவார். (ஜூன் 30)
- முன்னாள் துணை ஜனாதிபதி வெங்கையா நாயுடுவின் வாழ்க்கை, அரசியல் பயணம் குறித்த ‘வெங்கையா நாயுடு - லைப் இன் சர்வீஸ்’, ‘செலிபிரேட்டிங் பாரத் - 13வது துணை ஜனாதிபதியாக வெங்கையா நாயுடுவின் இலக்கை நோக்கிய பயணம் மற்றும் செய்தி’, ‘மகாநேதா - வெங்கையா நாயுடுவின் வாழ்க்கை மற்றும் பயணம்’ என்ற 3 நூல்களை பிரதமர் நரேந்திர மோடி டெல்லியில் வெளியிட்டார். (ஜூன் 30)
- மராட்டிய மாநில தலைமைச் செயலாளராக இருந்த நிதின் கரீர் ஓய்வுபெற்றதை அடுத்து மராட்டிய மாநிலத்தின் முதல் பெண் தலைமைச் செயலாளராக சுஜாதா சவுனிக் பதவியேற்றார். (ஜூலை 1)
- உக்ரைன்-ரஷியா போரில் ஐரோப்பிய நாடான பெலாரஸ் ரஷியாவுக்கு ஆதரவாக செயல்படுகிறது. இதனால் பெலாரஸ் மீது ஐரோப்பிய ஒன்றியம் பல்வேறு பொருளாதார தடைகளை விதித்து வந்த நிலையில், தற்போது தங்கம், வைரம் மற்றும் கச்சா எண்ணெய் இறக்குமதிக்கும் தடை விதித்துள்ளது. (ஜூன் 30)
- கடந்த 2023, 24ம் நிதியாண்டில் இந்தியாவின் பாதுகாப்பு தளவாட உற்பத்தி ரூ,1 லட்சத்து 26 ஆயிரத்து 887 கோடியாக உயர்ந்துள்ளது. அதில் பொதுத்துறை நிறுவனங்கள் 79,2 சதவீத தளவாடங்களையும், தனியார் துறை 20,8 சதவீத தளவாடங்களையும் உற்பத்தி செய்துள்ளன. இது முந்தைய நிதியாண்டுடன் ஒப்பிடுகையில் 16,7 சதவீத வளர்ச்சி ஆகும். (ஜூலை 5)
- ஜப்பானின் தனேகாஷியா தீவில் உள்ள விண்வெளி ஏவுதளத்தில் இருந்து எச் 3 ராக்கெட் மூலம் அனுப்பப்பட்ட அலாஸ் 4 என்ற செயற்கைக்கோள் வெற்றிகரமாக அதன் சுற்றுபாதையில் நிலைநிறுத்தப்பட்டது. பாதுகாப்பு அமைச்சகத்தால் உருவாக்கப்பட்ட இந்த செயற்கைக்கோள் புவி கண்காணிப்பு மற்றும் பேரிடர் கால மீட்பு நடவடிக்கைக்கு உதவிகரமாக இருக்கும் என ஜப்பான் அரசு தெரிவித்தது. (ஜூலை 1)
- சுயசார்பு இந்தியா திட்டத்தின்கீழ் நாக்பூரைச் சேர்ந்த ‘எகனாமிக் எக்ஸ்புளோசிவ்ஸ் லிமிடெட்’ என்ற தனியார் நிறுவனம் ‘செபெக்ஸ் 2’ என்ற புதிய வகை வெடிகுண்டை தயாரித்து உள்ளது. இது டிஎன்டி வெடிகுண்டை விட 2,01 மடங்கு சக்தி வாய்ந்தது ஆகும். இந்த புதிய வெடிகுண்டின் சோதனை இந்திய கடற்படையால் வெற்றிகரமாக நடத்தப்பட்டது. (ஜூலை 1)
- இந்திய விண்வெளி ஆராய்ச்சி நிறுவனம் (இஸ்ரோ) முதல்முதலாக சூரியனை ஆய்வு செய்ய கடந்த 2023ம் ஆண்டு செப்டம்பர் 2ம் தேதி ஆதித்யா எல் 1 விண்கலத்தை விண்ணில் ஏவியது. சூரியன், பூமி இடையே 15 லட்சம் கிலோமீட்டர் தொலைவில் உள்ள லாக்ராஞ்சியன் எல் 1 புள்ளியில், ஆதித்யா எல் 1 விண்கலம் நிலைநிறுத்தப்பட்டு பல்வேறு ஆய்வுகளை மேற்கொண்டது. இந்த நிலையில் எல் 1 புள்ளியைச் சுற்றி தனது முதல் ஒளிவட்ட சுற்றுப்பாதையை ஆதித்யா எல் 1 விண்கலம் நிறைவு செய்ததாக இஸ்ரோ தெரிவித்தது. (ஜூலை 2)
- 9வது 20 ஓவர் உலகக்கோப்பை கிரிக்கெட் போட்டியின் இறுதி ஆட்டத்தில் இந்தியா மற்றும் தென் ஆப்பிரிக்கா அணிகள் பிரிஜ்டவுனில் மோதின. அதில் முதலில் ஆடிய இந்திய அணி 20 ஓவர்களில் 7 விக்கெட்டுக்கு 176 ரன்கள் எடுத்தது. அதைத்தொடர்ந்து ஆடிய தென் ஆப்பிரிக்க அணி 20 ஓவர்களில் 8 விக்கெட்டுகளை இழந்து 169 ரன்கள் மட்டுமே எடுத்தது. இதனால் இந்திய அணி 7 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்று 2வது முறையாக சாம்பியன் பட்டத்தை கைப்பற்றியது. 20 ஓவர் உலகக்கோப்பை கிரிக்கெட் போட்டியில் தோல்வியே சந்திக்காமல் கோப்பையை வென்ற முதல் அணி என்ற சாதனையை இந்திய அணி படைத்தது. கடைசியாக 2007-ம் ஆண்டு நடைபெற்ற முதலாவது 20 ஓவர் உலகக்கோப்பையை இந்தியா வென்றது குறிப்பிடத்தக்கது. (ஜூன் 29)
- உலக செஸ் சாம்பியன்ஷிப் போட்டி இந்த ஆண்டு நவம்பர், டிசம்பரில் நடைபெறுகிறது. அதில் கேன்டிடேட்ஸ் செஸ் போட்டியில் வெற்றி பெற்ற இந்திய இளம் வீரர் குகேஷ், நடப்பு சாம்பியனான சீனாவின் டிங் லிரெனுடன் மோதுகிறார். 14 சுற்றுகளை கொண்ட இந்த போட்டி சிங்கப்பூரில் நடத்தப்படும் என்று சர்வதேச செஸ் சம்மேளனம் (பிடே) அறிவித்தது. (ஜூலை 1)
- 63வது தேசிய சீனியர் தடகள போட்டி அரியானா மாநிலம் பஞ்ச்குலாவில் நடைபெற்றது. அதில் அரியானா அணி 133 புள்ளிகளுடன் முதலிடம் பிடித்து சாம்பியன் பட்டத்தை கைப்பற்றியது. தமிழக அணி 3 தங்கம், 9 வெள்ளி உள்பட 18 பதக்கங்களை பெற்று 122 புள்ளிகளுடன் 2வது இடத்தை பிடித்தது. (ஜூலை 1)
Kalvisolai.in - A Powerful Portal for Education
TNPSC G.K - TNPSC TAMIL MEDIUM NOTES.
Monday, July 15, 2024
TNPSC CURRENT AFFAIARS JULY 2024
Friday, August 18, 2023
TNPSC CURRENT AFFAIRS AUGUST 2023
- 2019 முதல் 2021-ம் ஆண்டுவரை 13 லட்சத்து 13 ஆயிரம் பெண்களும், சிறுமிகளும் காணாமல் போய் உள்ளனர் என்ற அதிர்ச்சி தகவலை மத்திய அரசு வெளியிட்டது.
- கடந்த ஆண்டை போல், இந்த ஆண்டும் சுதந்திர தினத்தன்று வீடு தோறும் தேசிய கொடி ஏற்றுங்கள் என்று பிரதமர் மோடி வேண்டு கோள் விடுத்தார்.
- பேராசிரியர் நன்னன் எழுதிய புத்தகங்கள் நாட்டு டைமை ஆக்கப்படும் என்று அவரது நூற்றாண்டு நிறைவு விழாவில் முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் அறிவித்துள்ளார்.
- ஜூலை 30- வெளிநாடு வாழ் இந்தியர்களில் 66 சத வீதம் பேர் வளைகுடா நாடு களில் வசிப்பதாக வெளியுறவு துறை அமைச்சகம் கூறியுள்ளது.
- பாக்ஸ்கான் நிறுவனம் காஞ்சீபுரம் மாவட்டத்தில் ரூ.1,600 கோடி முதலீடு செய் கிறது. இதன் மூலம் 6 ஆயிரம் பேருக்கு வேலைவாய்ப்பு கிடைக்கும். இதற்கான ஒப்பந் தம் முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் முன்னிலை யில் கையெழுத்தானது.
- மணிப்பூர் விவகாரத்தில் வழக்கு பதிவு செய்ய தாமதம் ஏன்? என்றும், எடுக்கப்பட்ட நடவடிக்கைகள் என் னென்ன? என்றும் மத்திய- மாநில அரசுகளுக்கு சுப்ரீம் கோர்ட்டு சரமாரி கேள்வி எழுப்பியது.
- பழனி கோவிலுக்குள் மாற்று மதத்தினர் செல்ல தடை அறிவிப்பு பலகையை மீண்டும் வைக்க வேண்டும் என மதுரை ஐகோர்ட்டு உத்தரவிட்டது.
- நாடு முழுவதும் 4,001 எம்.எல்.ஏ.க்களின் சொத்து மதிப்பு ரூ.54,545 கோடி என்பது ஆய்வறிக்கையில் தெரியவந்தது.
- பேனா நினைவு சின்னத் துக்கு எதிராக சுப்ரீம் கோர்ட் டில் தாக்கல் செய்யப்பட்ட வழக்குகள் தள்ளுபடி செய்யப் பட்டன. அரசியலுக்காக கோர்ட்டை பயன்படுத்த வேண்டாம் என நீதிபதி தெரிவித்தார்.
- 2023-24-ம் ஆண்டில் சாதனை அளவாக 6.77 கோடி வருமான வரி கணக்குகள் தாக்கல் செய்யப்பட்டுள்ளதாக வருமான வரித்துறை தெரிவித்துள்ளது.
- 2,000 ரூபாய் நோட்டுகளை திரும்பப்பெறுவதாக அறிவித்த பிறகு, ரூ.3.14 லட்சம் கோடி மதிப்புள்ள 88 சதவீத நோட்டுகள் வங்கிகளுக்கு திரும்பி விட்டன என ரிசர்வ் வங்கி தெரிவித்துள்ளது.
- பயிரை சேதப்படுத்தியதற் காக விவசாயிகளுக்கு ஏக்கருக்கு ரூ.40 ஆயிரம் வீதம் இழப்பீடு வழங்க வேண்டும் என்று என்.எல்.சி. நிர்வாகத்துக்கு சென்னை ஐகோர்ட்டு உத்தரவிட்டுள் ளது.
நாடு முழுவதும் 20 பல்கலைக்கழகங்கள் போலியானவை என பல்கலைக்கழக மானியக்குழு (யு.ஜி.சி.) அறிவித்து உள்ளது.
மத்திய ஆயுத படைகள் மற்றும் டெல்லி போலீசில் 1 லட்சத்து 14 ஆயிரம் காலி யிடங்கள் இருப்பதாக மாநிலங்களவையில் மத்திய மந்திரி கூறினார். - நாடாளுமன்ற மக்களவை யில் கடும் அமளிக்கு இடையே டெல்லி நிர்வாக மசோதா நிறைவேறியது. மசோதாவுக்கு எதிர்ப்பு தெரிவித்து எதிர்க் கட்சி எம்.பி.க்கள் வெளிநடப்பு செய்தனர்.
- நாட்டிலேயே முதல்முறை யாக இரு மாநிலங்களை இணைக்கும் வகையில் தமிழ் நாட்டில் உள்ள ஓசூர் மற்றும் கர்நாடகாவின் பெங்களூரு இடையே மெட்ரோ ரெயில் சேவை தொடங்குவதற்கான சாத்தியக்கூறுகள் ஆய்வு செய்ய ஒப்பந்தப்புள்ளி கோரப்பட்டுள்ளது.
- மோடி பற்றிய அவதூறு வழக்கில் 2 ஆண்டு சிறைத் தண்டனை விதிக்கப்பட்ட ராகுல் காந்தி எம்.பி. பதவியில் இருந்து தகுதிநீக்கம் செய்யப்பட்டு இருந்த நிலையில், அவரது தண்டனையை நிறுத்தி வைத்து சுப்ரீம் கோர்ட்டு உத்தர விட்டு உள்ளது.
- தேனி எம்.பி. ரவீந்திரநாத் தின் வெற்றி செல்லாது என்ற சென்னை ஐகோர்ட்டு தீர்ப் புக்கு சுப்ரீம் கோர்ட்டு இடைக் கால தடை விதித்துள்ளது.
- செந்தில் பாலாஜிக்கு தொடர்புடைய இடங்களில் நடத்தப்பட்ட சோதனையில் ரூ.22 லட்சம் மற்றும் 60 சொத்து ஆவணங்களை அமலாக்கத்துறை அதிகாரி கள் பறிமுதல் செய்துள்ளனர்.
- நிலவின் தென்துருவ ஆராய்ச்சிக்காக அனுப்பப்பட்ட ‘சந்திரயான்-3’விண்கலம் வெற்றிகரமாக நிலவு சுற்றுப்பாதைக்குள் நுழைந்தது.
- ஆதிச்சநல்லூரில் இருந்து வெளிநாடுகளுக்கு கொண்டு செல்லப்பட்ட 5 ஆயிரம் தொல்லியல் பொருட்களை மீட்க நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது" என்று அருங்காட்சியகம் அடிக்கல் நாட்டு விழாவில் மத்திய நிதி மந்திரி நிர்மலா சீதாராமன் கூறினார்.
- அமெரிக்கா புலனாய்வு முகமையின் உயர் பொறுப்பில் இந்திய
வம்சாவளி பெண் ஷோஹினி சின்கா நியமனம் செய்யப்பட்டார். - இலங்கையில் உள்நாட்டு பரிவர்த்தனை களுக்கு இந்திய ரூபாய் செல்லுபடியாகாது என்று இலங்கையின் மத்திய வங்கி அறிவித்தது.
உலகம் - வெளிநாடு வாழ் இந்தியர்களில் 66 சத வீதம் பேர் வளைகுடா நாடு களில் வசிப்பதாக வெளி யுறவு துறை அமைச்சகம் கூறியுள்ளது.
- அமெரிக்கா புலனாய்வு முகமையின் உயர் பொறுப்பில் இந்திய
வம்சாவளி பெண் ஷோஹினி சின்கா நியமனம் செய்யப்பட்டார். - இலங்கையில் உள்நாட்டு பரிவர்த்தனை களுக்கு இந்திய ரூபாய் செல்லுபடியாகாது என்று இலங்கையின் மத்திய வங்கி அறிவித்தது.
விளையாட்டு - உலக வில்வித்தை சாம்பியன்ஷிப்பில் 17 வயது இந்திய வீராங்கனை அதிதி தங்கம் வென்று சாதனை படைத்தார்.
- இந்தியா, இங்கிலாந்து, ஸ்பெயின் ஆகிய 3 நாடுகள் இடையேயான ஆக்கி போட்டி யில் இந்திய பெண்கள் அணி முதலிடம் பிடித்தது.
- ஆஸ்திரேலியாவுக்கு எதிரான ஆஷஸ் கடைசி டெஸ்டில் இங்கிலாந்து வெற்றி பெற்று தொடரை சமன் செய்தது.
- ஆசிய விளையாட்டுக்கான இந்திய கால்பந்து அணி அறிவிக்கப்பட்டது. தமிழக வீரர் சிவசக்தி இடம் பிடித்தார்.
- வெஸ்ட் இண்டீசுக்கு எதிரான கடைசி ஒரு நாள் கிரிக்கெட் போட்டியில் எளிதில் வெற்றி பெற்ற இந்திய அணி தொடரையும் வசப்படுத்தியது. தொடர்ச்சியாக 13-வது முறையாக தொடரை வென்றிருப்பது குறிப்பிடத்தக்கது.
- ஆசிய சாம்பியன்ஸ் கோப்பை ஆக்கியில் இந்திய அணி 7-2 என்ற கோல் கணக்கில் சீனாவை வீழ்த்தி போட்டியை அட்ட காசமாக தொடங்கியது.
- உலக செஸ் தரவரிசையில் தமிழக வீரர் குகேஷ் 9-வது இடத்தை பிடித்தார்.
- உலக வில்வித்தை சாம்பியன்ஷிப்பில் இந்திய பெண்கள் அணி தங்கப்பதக்கம் வென்று சாதனை படைத்தது.
ஜூலை 30 :
ஜூலை 31 :
ஆகஸ்டு 1 :
ஆகஸ்டு 2 :
ஆகஸ்டு 3 :
ஆகஸ்டு 4 :
ஆகஸ்டு 5 :
Saturday, August 05, 2023
TNPSC CURRENT AFFAIRS JULY 2023
ஜூலை 23 :- தேசிய மற்றும் சர்வதேச போட்டிகளுக்கு பயிற்சி அளிக்க மணிப்பூரில் சாதகமற்ற சூழ் நிலை நிலவுவதால், அம்மாநிலத்தைச் சேர்ந்த விளையாட்டுவீரர்கள் தமிழ்நாட்டிற்கு வந்து பயிற்சி பெறலாம் என்று முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் கூறியுள்ளார்.
- மதுரை எய்ம்ஸ் மருத்துவமனை 2028-ம் ஆண்டு கட்டி முடிக்கப்படும் என அமைச்சர் மா.சுப்பிரமணியன் கூறினார்.
- டிரைவர், கண்டக்டர்களுக்கு 8 மணி நேரத்துக்கு மேல் பணி ஒதுக்கக் கூடாது என்று மதுரை ஐகோர்ட்டு உத்தரவிட்டது.
ஜூலை 24 : - கலைஞர் மகளிர் உரிமைத்தொகை பெறுவதற்கான விண்ணப்ப பதிவை முதல் அமைச்சர் மு.க.ஸ்டாலின் தர்மபுரியில் தொடங்கிவைத்தார். இதற்கென தமிழகம் முழுவதும் 36 ஆயிரம் சிறப்பு முகாம்கள் நடைபெற்றன.
- மணிப்பூர் பிரச்சினை குறித்து நாடாளு மன்றத்தில் விவாதிக்க வருமாறு அமித்ஷா விடுத்த அழைப்பை எதிர்க்கட்சிகள் ஏற் காமல் அமளியில் ஈடுபட்டதால் இரு அவை களும் முடங்கின.
போலீசார், பொதுமக்கள் நல்லுறவை மேம்படுத்தும் வகையில் 250 போலீஸ் நிலையங்களில் சிறப்பு வசதிகள் ஏற்படுத்து வதற்கு ரூ.10 கோடிக்கு நிர்வாக ஒப்புதல் அளித்து முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் உத்தரவிட்டார். - சென்னை விமான நிலையத்தில் பயணி கள் கூட்ட நெரிசலை குறைக்க உள்நாட்டு முனையம் விரிவுபடுத்தப்படுகிறது.
- பேரிடர் அபாயங்களை செல்போன் மூலம் உஷார்படுத்தும் திட்டத்தை தேசிய பேரிடர் மேலாண்மை ஆணையம் செயல்படுத்த உள்ளது. இதன்மூலம், செல்போன் ‘சுவிட்ச் ஆப்' செய்யப்பட்டி ருந்தாலும் எச்சரிக்கை அலாரம் ஒலிக் கும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
ஜூலை 25 :- இன்னும் ரூ.84 ஆயிரம் கோடி, 2,000 ரூபாய் நோட்டுகள் புழக்கத்தில் உள்ளன என்று மத்திய அரசு தெரிவித்தது.
- கடந்த 1-ந் தேதி நிலவரப்படி, இந்தியா வின் மக்கள் தொகை 139 கோடி என்று மதிப்பிடப்பட்டு இருப்பதாக மக்களவையில் தெரிவிக்கப்பட்டது.
- மணிப்பூர் விவகாரத்தில் மத்திய அரசு மறைக்க எதுவும் இல்லை. எவ்வளவு நேரம் வேண்டுமானாலும் விவாதிக்க தயார் என்று நாடாளுமன்றத்தில் மத்திய மந்திரி அமித்ஷா கூறினார்.
- இமாச்சலபிரதேசத்தில் மேக வெடிப்பு ஏற்பட்டு கன மழை கொட்டியதால் பாலங்கள், வீடுகள் வெள்ளத்தில் சேதம் அடைந்தன.
- கொரியா ஓபன் பேட்மிண்டனில் இந்தியாவின் சாய் ராஜ்-சிராக் ஷெட்டி ஜோடி சாம்பியன் கோப்பையை வென்று தங்கப்பதக்கத்தை உச்சி முகர்ந்தது.
- இங்கிலாந்துக்கு எதிரான 4-வது டெஸ்டில் கடைசி நாள் ஆட்டம் மழையால் ரத்து செய்யப்பட்டதையடுத்து ஆஷஸ் கோப்பையை ஆஸ்திரேலியா தக்கவைத்தது.
- இளையோர் ஆசிய கோப்பை கிரிக் கெட் இறுதி போட்டியில் இந்திய அணியை வீழ்த்தி பாகிஸ்தான் சாம்பியன் கோப்பையை வென்றது.
- வெஸ்ட் இண்டீசுக்கு எதி ரான கடைசி டெஸ்ட் மழையால் டிராவில் முடிந்தது. இதனால் தொடரை இந்தியா 1-0 என்ற கணக்கில் கைப்பற்றியது.
- சென்னையில் நடைபெறும் ஆசிய சாம்பியன்ஸ் கோப்பை ஆக்கி போட்டி யில் பங்கேற்கும் இந்திய அணி அறிவிக் கப்பட்டது.
- 2-வது டெஸ்டில் இலங் கையை வீழ்த்தி பாகிஸ்தான் அணி இன்னிங்ஸ் வெற்றியோடு தொடரை வசப்படுத்தியது.
- 20 ஓவர் உலகக் கோப்பை போட்டிக்கு பப்புவா நியூகினியா தகுதி பெற்றது.
- அடுத்த ஆண்டு நடைபெறும் 20 ஓவர் உலகக் கோப்பை கிரிக் கெட் போட்டி ஜூன் 4-ந் தேதி தொடங்குகிறது.
- என்.எல்.சி. சுரங்க விரிவாக்க பணி மீண்டும் தொடங்கியது. இதில் வயல்களில் நெற்பயிர்களை பொக்லைன் எந்திரங்கள் கொண்டு அழித்ததால் விவசாயிகள்
வேதனையடைந்தனர். - அரிசி ஏற்றுமதி தடையை நீக்க இந்தியாவை ஊக்குவிப்போம் என்று சர்வ தேச நிதியம் தெரிவித்துள்ளது.
- தமிழ்நாடு முழுவதும் செயல்படாத ஆழ் துளை கிணறுகள், குவாரிகுழிகளை உடனே கண்டறிந்து உரிய பாதுகாப்பு நடவடிக்கை களை மேற்கொள்ள வேண்டும் என்று மாவட்ட கலெக்டர்களுக்கு தலைமைச் செயலாளர் சிவ்தாஸ் மீனா உத்தரவிட்டுள் ளார்.
- நாட்டில் கொரோனா ஆபத்து முடிவுக்கு வந்துவிட்டதாக மத்திய சுகாதாரத்துறை மந்திரி மன்சுக் மாண்டவியா தெரிவித்தார்.
உலகம் - உக்ரைனுக்கு ரூ.32 ஆயிரம் கோடி ராணுவ உதவிகளை அமெரிக்கா வழங்குகிறது.
தென்கொரிய கடற்பகுதியில் குறுகிய தூர ஏவுகணைகளை ஏவி வட கொரியா சோதனை நடத்தியது. - ஜப்பானில் வரலாறு காணாத அளவுக்கு மக்கள்தொகை வீழ்ச்சி அடைந்துள்ளது.
- ஆப்பிரிக்க நாடான நைஜீரியாவில் ராணுவம் ஆட்சியை கைப்பற்றியது. இதற்கு ஐ.நா. உள்ளிட்ட பல்வேறு அமைப்புகள் கடும் கண்டனம் தெரிவித்துள்ளன.
- பாகிஸ்தானுக்கு சீனா ரூ.19 ஆயிரத்து 600 கோடி கடன் வழங்கியது.
ஜூலை 27 :- மணிப்பூர் கலவரத்தில் 2 பெண்களை நிர்வாணமாக்கி ஊர்வலமாக அழைத்துச் சென்ற விவகாரத்தில் சி.பி.ஐ. விசாரணைக்கு மத்திய அரசு பரிந்துரைத்து உள்ளது.
- சென்னையை அடுத்த மறைமலை நகர் அருகில் தாவரவியல் பூங்கா அமைக்க இங்கிலாந்து அரசுடன் தமிழ்நாடு அரசு புரிந் துணர்வு ஒப்பந்தம் ஒன்றில் கையெழுத்திட்டு உள்ளது.
- தமிழ்நாட்டில் முழுமையான கட்டமைப்பு வசதிகள் இல்லாத 80 என்ஜினீயரிங் கல்லூரிகளின் அங்கீகாரம் தற்காலிகமாக நிறுத்தி வைக்கப்பட்டுள்ளது.
- சென்னை, கோவையில் நில வழிகாட்டி மதிப்பு உயர உள்ளதாக அமைச்சர் மூர்த்தி தெரிவித்தார்.
'சுற்றுச்சூழலை பாதுகாக்க இந்தியா எடுக்கும் முடிவுகளுக்கு உறுதுணையாக இருப்போம்' என சென்னையில் நடந்த ஜி-20 மாநாட்டில் பங்கேற்ற பல்வேறு நாடுகளின் மந்திரிகள் தெரிவித்தனர்.
ஜூலை 28 :- கையகப்படுத்தப்பட்ட நிலத்தை எடுக்க 20 ஆண்டுகள் காத்திருந்ததை போல, பயிரை அறுவடை செய்ய 2 மாதங்கள் காத் திருக்க முடியாதா? என்று என்.எல்.சி. நிர்வாகத்துக்கு சென்னை ஐகோர்ட்டுகடும் கண்டனம் தெரிவித்துள்ளது.
- செஸ் ஒலிம்பியாட் போட்டியை சிறப்பாக நடத்தியதற்காக செஸ் கூட்டமைப்பு சார்பில் வழங்கப்பட்ட சிறந்த மனிதர் விருது முதல்- அமைச்சர் மு.க.ஸ்டாலினிடம் ஒப்படைக்கப் பட்டது.
- ஆசிரியர் பணியிடங்களுக்கான அறிவிப்புகள் வர உள்ளது என்றும், அந்த இடங்கள் மிக விரைவில் நிரப்பப்படும் என்றும் அமைச்சர் அன்பில் மகேஷ் பொய்யாமொழி கூறினார்.
- ஆசிய சாம்பியன்ஸ் கோப்பை ஆக்கி போட்டிக்காக சென்னையில் ரூ.16 கோடி செலவில் மேம்படுத்தப்பட்ட ஆக்கி விளையாட்டு மைதானத்தை முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் திறந்து வைத்தார்.
ஜூலை 29 :- மணிப்பூரில் பழங்குடியின பெண்கள் மானபங்கம் செய்யப்பட்ட சம்பவம் தொடர்பாக சி.பி.ஐ. தனது விசாரணையை தொடங்கியுள்ளது.
- உலக உணவு திட்டத்தில் ஏற்பட்டுள்ள கடுமையான நிதி நெருக்கடி காரணமாக உலகளவில் லட்சக்கணக்கானோருக்கு உணவு உதவியை நிறுத்த வேண்டிய கட்டாயத்துக்கு ஐ.நா. தள்ளப்பட்டுள்ளது.
- ஆனைமலை மிகச்சிறந்த புலிகள் காப்பகம் என்று மத்திய அரசு அறிவித்துள்ளது.
Saturday, March 18, 2023
TNPSC CURRENT AFFAIRS MARCH 2023
மார்ச் 5 : சென்னை மாநகரில் நடப்பு ஆண்டில் 500 தனியார் பஸ்களை இயக்க மாநகர போக்குவரத்து கழகம் நடவடிக்கை எடுத்து வருகிறது. இதற்கு தொழிற் சங்கங்கள் எதிர்ப்பு தெரிவித்து உள்ளன.
மார்ச் 5 : தமிழ்நாட்டு மக்கள் மிகவும் நல்லவர்கள்; வடமாநில தொழிலாளர்கள் பீதியடைய வேண்டாம் என்று கவர்னர் ரவி கேட்டுக்கொண்டுள்ளார்.
மார்ச் 5 : ஈரானில் மேலும் 100 பள்ளி மாணவி களுக்கு விஷம் கொடுக்கப்பட்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. இதை தொடர்ந்து அங்கு அரசுக்கு எதிராக மக்கள் போராட்டத்தில் குதித்துள்ளனர்.
மார்ச் 5 : அருங்காட்சியகம் தமிழர்களின் பாரம்பரியத்தை பறை சாற்றும் அகழாய்வு பொருட்களுடன் கீழடியில் பிரமாண்ட அருங்காட்சியகம் அமைக்கப்பட்டு உள்ளது. இந்த அருங்காட்சியகத்தை முதல் அமைச்சர் மு.க.ஸ்டாலின் திறந்துவைத்து பார்வையிட்டார்.
மார்ச் 5 : தமிழகத்தில் வேகமாக பரவி வரும் வைரஸ் காய்ச்சலால் ஆஸ்பத்திரி களில் நோயாளிகள் குவிந்தனர்.
மார்ச் 5 : அரபிக்கடலில் கப்பலில் இருந்து செலுத்தப்பட்ட 'பிரமோஸ் ஏவுகணை சோதனை வெற்றி அடைந்தது.
மார்ச் 6 : நாகாலாந்தில் ஆளும் கூட்டணிக்கு அனைத்து கட்சிகளும் நிபந்தனையற்ற ஆதரவு அளிப்பதால், அங்கு எதிர்க் கட்சியே இல்லாத அரசு அமைகிறது.
மார்ச் 6 : அரசு பஸ்கள் தனியார்மயம் ஆகாது என்றும், மாணவர்கள், பெண்களுக்கான சலுகைகள் தொடர்ந்து கிடைக்கும் என்றும் தமிழக போக்குவரத்து துறை அமைச்சர் சிவசங்கர் தெரிவித்தார்.
மார்ச் 6 : சென்னை ஐ.ஐ.டி.யில் ஆன்லைன் மூலம் படிக்கும் வகையிலான பி.எஸ். மின்னணு அமைப்பியல் எனப் படும் புதிய பட்டப்படிப்பை மத்திய மந்திரி தர்மேந்திர பிரதான் அறிமுகம் செய்து வைத்தார்.
மார்ச் 7 : சாதி, மத கலவரத்தை உருவாக்கி மக்களை பிளவுபடுத்த முயற்சி நடப்பதாகவும், தி.மு.க. ஆட்சியை அகற்ற சதி நடப்பதாகவும் முதல் அமைச்சர் ஸ்டாலின் குற்றம் சாட்டினார்.
மார்ச் 7 : ஒரே நபரின் பெயரில் உள்ள ஒன்றுக்கும் மேற்பட்ட வீட்டு மின் இணைப்புகளை ஒன்றிணைப்பதாக வரும் தகவல் தவறானது என்று தமிழ்நாடு மின் உற்பத்தி பகிர்மான கழகம் தகவல் தெரிவித்துள்ளது.
மார்ச் 7 : சமீபகாலமாக பரவி வரும் வைரஸ் காய்ச்சலுக்கு, டாக்டர் பரிந்துரைத்த மருந்துகளை மட்டுமே பொதுமக்கள் எடுத்துக்கொள்ள வேண்டும் என அமைச்சர் ுப்பிரமணியன் வேண்டுகோள் விடுத்தார்.
மார்ச் 7 : கோடை காலத்திற்கு 18 ஆயிரத்து 500 மெகா வாட் மின்சாரம் தேவை என்று அமைச்சர் செந்தில் பாலாஜி கூறியுள்ளார்.
மார்ச் 7 : ரூ.10 ஆயிரம் கோடி செலவில் 70 பயிற்சி விமானங்கள், 3 பயிற்சி கப்பல் கள் வாங்க ராணுவ அமைச்சகம் ஒப்பந்தத்தில் கையெழுத்திட்டது.பயிற்சி கப்பல்கள், சென்னை அருகே காட் டுப்பள்ளியில் கட்டப்படுகின்றன.
மார்ச் 8 : ஆன்லைன் சூதாட்ட தடை மசோ தாவை கவர்னர் ஆர்.என்.ரவி திருப்பி அனுப்பினார். ஆன்லைன் சூதாட்டத்துக்கு தடை விதிக்கும் அதிகாரம் தமிழக சட்டசபைக்கு இல்லை என்று கவர்னர் விளக்கம் அளித்து உள்ளார்.
மார்ச் 8 : வெளி மாநில தொழிலாளர்கள் பற்றிய விவரங்களை சேகரிக்க வேண் டும் என்று போலீசாருக்கு டி.ஜி.பி. சைலேந்திரபாபு உத்தரவிட்டுள்ளார்.
மார்ச் 8 : திருமணமான மகள் வாரிசு வேலை பெற தகுதியானவர் இல்லை என்று தனி நீதிபதி பிறப்பித்த உத்தரவை ரத்து செய்து ஐகோர்ட்டு டிவிசன் பெஞ்சு தீர்ப்பு அளித்துள்ளது.
மார்ச் 8 : திரிபுரா முதல் மந்திரியாக 2-வது தடவையாக மாணிக் சகா பதவி ஏற்றார். பிரதமர் மோடி, அமித்ஷா, ஜே.பி.நட்டா உள்ளிட்டோர் பதவி ஏற்பு விழாவில் பங்கேற்றனர்.
மார்ச் 8 : எந்த காலகட்டத்திலும் அரசு பள்ளிகளில் நுழைவுத்தேர்வு என்ற வார்த் தையே இருக்காது என்று அமைச்சர் அன்பில் மகேஷ் பொய்யாமொழி தெரிவித்தார்.
மார்ச் 8 : பழங்குடியின பெண்களுக்கும் குடும்ப சொத்தில் சமபங்கு பெறும் உரிமை உண்டு என சென்னை ஐகோர்ட்டு உத்தரவிட்டு உள்ளது.
மார்ச் 9 : சாகர்மாலா திட்டத்தில் தமிழகத்தில் 4 மிதக்கும் கப்பல் தளங்கள் அமைக்க மத்திய அரசு அனுமதி வழங்கி உள்ளது.
மார்ச் 9 : ஆன்லைன் சூதாட்ட தடை மசோ தாவை மீண்டும் சட்டசபையில் நிறை வேற்றி கவர்னருக்கு அனுப்பி வைப்பது என தமிழக அமைச்சரவை கூட்டத்தில் முடிவு செய்யப்பட்டு உள்ளது.
மார்ச் 9 : இந்தியாவில் ஒரு கோடி முதியோருக்கு ஞாபகமறதி நோய் இருக்கலாம் என்று புதிய ஆய்வில் தெரிய வந்துள்ளது.
மார்ச் 9 : அடுத்த மாதம் (ஏப்ரல்) 1-ந்தேதி முதல் சுங்கச்சாவடி கட்டணம் 10 சதவி தம் வரை உயருகிறது. இதன்மூலம் அத்தியாவசிய பொருட்கள் விலை உயரும் அபாயம் உள்ளது.
மார்ச் 9 : தரமற்ற மணல் விற்பனையை தடுக்கும் வகையில் எம்.சாண்ட் மணல் உற்பத்தியை ஒழுங்குபடுத்துவதற்கான புதிய கொள்கையை முதல் அமைச்சர் ஸ்டாலின் வெளியிட்டார்.
மார்ச் 9 : சட்ட ரீதியிலான உரிய அனுமதி, குத்தகை, உரிமம், ஆவணங்கள் இல்லாமல் அரசு நிலத்தை தொடர்ந்து பயன் படுத்த யாருக்கும் அனுமதி கிடையாது என்று சென்னை ஐகோர்ட்டு உத்தரவிட்டு உள்ளது.
மார்ச் 9 : பலத்த போலீஸ் பாதுகாப்புடன் என். எல்.சி. 2-வது சுரங்க விரிவாக்க பணி தொடங்கியது. போராட்டத்தில் ஈடுபட்ட பா.ம.க. மாவட்ட செயலாளர்கள் உள்பட 80 பேரை போலீசார் கைது செய்தனர்.
மார்ச் 10 : இந்தியாவில் புதிய வகை வைரஸ் காய்ச்சலுக்கு 2 பேர் பலியாகி உள்ளனர்.
மார்ச் 10 : வைரஸ் காய்ச்சல் வேகமாக பரவி வரும் நிலையில் தமிழகம் முழுவதும் 1,000 இடங்களில் மருத்துவ முகாம் நடை பெற்றது. பொது இடங்களில் பொது மக்கள் முககவசம் அணியுமாறு தமிழக அரசு வலியுறுத்தி உள்ளது.
மார்ச் 10 : நாகூர் பட்டினச்சேரி கடற்கரையில் குழாய் உடைந்து மீண்டும் கச்சா எண் ணெய் வெளியேறியது. அங்கு போலீசார் குவிக்கப்பட்டதால் பரபரப்பு ஏற்பட்டது.
மார்ச் 10 : 11, 12-ம் வகுப்பு பொதுத்தேர்வை 16 லட்சத்து 39 ஆயிரத்து 367 மாணவ- மாணவிகள் எழுதுகிறார்கள்.
மார்ச் 11 : கொரோனா காலத்தில் ஆன்லைன் மூலம் வழக்குகளுக்கு தீர்வு கண்டதில் தமிழகம் முதலிடத்தில் இருப்பதாக சென்னை ஐகோர்ட்டு பொறுப்பு தலைமை நீதிபதி டி.ராஜா பேசினார்.
மார்ச் 11 : நடப்பு நிதியாண்டில் இதுவரை நிகர நேரடி வரி வசூல் ரூ.13 லட்சத்து 73 ஆயிரம் கோடியாக உள்ளது. இது பட் ஜெட் மதிப்பீட்டில் 83 சதவீதம் ஆகும்.
மார்ச் 11 : மனிதருக்கு பாதிப்பை ஏற்படுத்தும் பூச்சிக்கொல்லிகளுக்கு தடை விதித்து தமிழக அரசு உத்தரவிட்டுள்ளது.
மார்ச் 11 : ஸ்டெர்லைட் ஆலையை விட என். எல்.சி.யால் 100 மடங்கு பிரச்சினை ஏற் படுகிறது என பா.ம.க. தலைவர் அன்பு மணி ராமதாஸ் தெரிவித்தார்.
மார்ச் 11 : போலீஸ் நிலையத்தில் ஏற்படும் மரணத்துக்கான இழப்பீட்டுத் தொகையை ரூ.72 லட்சமாக உயர்த்தி தமிழக அரசு உத்தரவிட்டுள்ளது.
மார்ச் 11 : டெல்லியில் நடந்த விழாவில் தமிழகத்தை சேர்ந்த ஓய்வு பெற்ற ஐ.ஏ.எஸ். அதிகாரியும், எழுத்தாளரு மான ராஜேந்திரனுக்கு சாகித்ய அகாடமி விருது வழங்கப்பட்டது.
மார்ச் 11 : 'சிற்பி' திட்டத்தில் உள்ள அரசு பள்ளி மாணவர்கள் 5 லட்சம் விதைப் பந்துகளை தயாரித்து உலக சாதனை படைத்தனர்.
மார்ச் 11 : நாடு முழுவதும் சில மாநிலங்கள் மற்றும் யூனியன் பிரதேசங்களில் புதிய வகை வைரஸ் காய்ச்சலுடன், கொரோனா தொற்றும் படிப்படியாக அதிகரித்து வருவது தொடர்பாக மத்திய அரசு கவலை வெளியிட்டு உள்ளது.
மார்ச் 5 : சீனா தனது ராணுவத்துக்கு ரூ.18 லட்சத்து 33 ஆயிரம் கோடி ஒதுக்கியுள்ளது. இது இந்தியாவை விட 3 மடங்கு அதிகம் ஆகும்.
மார்ச் 6 : ஊழல் வழக்கு ஒன்றில் பாகிஸ்தான் முன்னாள் பிரதமர் இம்ரான்கானை போலீசார் கைது செய்ய சென்றபோது, அவர் தலைமறைவானார்.
மார்ச் 7 : ஏவுகணைகளை சுட்டு வீழ்த்தினால் போர் வெடிக்கும் என்று அமெரிக்காவுக்கு வடகொரியா பகிரங்க எச்சரிக்கை விடுத்தது.
மார்ச் 9 : நேபாளத்தின் புதிய அதிபராக ராம் சந்திர பவுடல் தேர்வு செய்யப்பட்டார்.
மார்ச் 9 : உக்ரைனில் ரஷியா நடத்திய ஏவுகணை தாக்குதலில் 6 பேர் பலியாகினர்.
மார்ச் 10 : சீன அதிபராக தொடர்ந்து 3-வது முறையாக ஜின் பிங் அந்த நாட்டு நாடாளுமன்றத்தில் பதவியேற்றார்.
மார்ச் 9 : பிரதமர் மோடியை ஆஸ்திரேலிய பிரதமர் ஆண்டனி அல்பானீஸ் சந்தித்து பேசினார். இருதரப்பிலும் 4 ஒப்பந்தங்கள் கையெழுத்தாயின.
மார்ச் 5: இரானி கோப்பை கிரிக்கெட் போட்டி யில் ரெஸ்ட் ஆப் இந்தியா அணி 'சாம்பியன்' பட்டம் வென்றது. ஐதராபாத்தில் தனது கடைசி டென்னிஸ் போட்டியில் ஆடிய சானியா மிர்சா கண்ணீர் மல்க விடை பெற்றார். சந்தோஷ் கோப்பை கால்பந்து போட்டியில் 54 ஆண்டுக்கு பிறகு கர்நாடகா அணி கோப்பையை வென்றது.
மார்ச் 6: கொரோனா தடுப் பூசி போடாததால் அமெரிக்க டென்னிஸ் போட்டிகளில் ஜோகோவிச் பங்கேற்க அனுமதி மறுக்கப்பட்டது. ஒருநாள் கிரிக்கெட் போட்டியில் வங்காளதேச அணி வெற்றி பெற்று உலக சாம்பியன் இங்கி லாந்துக்கு அதிர்ச்சி அளித்தது. தென்ஆப்பிரிக்க 20 ஓவர் அணியின் கேப்டனாக மார்க்ரம் நியமனம் செய்யப்பட்டார்.
மார்ச் 8 : இந்திய கிரிக்கெட் அணியின் முன்னணி வேகப் பந்து வீச்சாளர் பும்ராவுக்கு நியூசிலாந்தில் உள்ள ஆஸ்பத்திரியில் வெற்றிகரமாக ஆபரேஷன் நடந்தது. அவர் களம் திரும்ப குறைந்தபட்சம் 6 மாதமாகும் என்று தெரிகிறது.
மார்ச் 9 : இந்தியா- ஆஸ்திரேலியா அணிகளுக்கு இடையேயான டெஸ்ட் கிரிக் கெட் போட்டியை பிரதமர் நரேந்திர மோடியும்,ஆஸ்திரேலிய பிரதமர் ஆண்டனி அல்பானீசும் நேரில் கண்டுகளித் தனர். 20 ஓவர் கிரிக்கெட் போட்டியில் இங்கிலாந்தை வீழ்த்தி வங்காளதேசம் வரலாறு படைத்தது.
மார்ச் 10: இந்தியாவுக்கு எதிரான கடைசி டெஸ்டில் ஆஸ்திரேலிய அணி முதல் இன்னிங்சில் 480 ரன்கள் குவித்தது. புரோ ஆக்கி லீக் போட்டியில் உலக சாம்பியன் ஜெர்மனியை வீழ்த்தி இந்தியா வெற்றி பெற்றது.
மார்ச் 11 : வெஸ்ட் இண்டீசுக்கு எதிரான கடைசி டெஸ்ட் போட்டியில் தென்ஆப்பிரிக்க அணி அபார வெற்றி பெற்றதுடன் தொடரையும் கைப்பற்றியது.
Sunday, February 19, 2023
சிற்பி பாலசுப்பிரமணியம்
Saturday, February 04, 2023
TNPSC CURRENT AFFAIRS JANUARY 2023
ஜனவரி 22 : சென்னையில் நடந்த புத்தகக் கண்காட்சிக்கு 15 லட்சம் வாசகர்கள் வருகைப் புரிந்தனர். இதில், ரூ.16 கோடிக்கும் மேல் புத்தகங்கள் விற்றுத் தீர்ந்துள்ளன.
ஜனவரி 22 : ரூ.393 கோடி செலவில் கிளாம்பாக்கத்தில் அமைக்கப்பட்டுள்ள புதிய புறநகர் பஸ் நிலையத்தை முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் அடுத்த மாதம் (பிப்ரவரி) 15-ந் தேதி திறந்து வைக்கிறார்.
ஜனவரி 22 : குருவாயூர் கோவிலுக்கு சொந்தமாக 263 கிலோ தங்கமும், 6 ஆயிரத்து 605 கிலோ வெள்ளியும் இருப்பதாகக் கோவில் நிர்வாகம் தெரிவித்துள்ளது.
ஜனவரி 22 : நீதிபதிகளை நியமிக்கும் விவகாரம் பற்றிக் கருத்து தெரிவித்த ஓய்வுபெற்ற நீதிபதி சோதி, சட்டம் இயற்ற சுப்ரீம் கோர்ட்டுக்கு அதிகாரம் இல்லை என்று கூறியுள்ளார்.
ஜனவரி 23 : அந்தமானில் உள்ள 21 தீவுகளுக்குப் பரம்வீர் சக்ரா விருது பெற்றவர்களின் பெயர்களைப் பிரதமர் மோடி சூட்டினார். மேலும் நேதாஜி நினைவு மண்டபத்தின் மாதிரியையும் திறந்து வைத்தார்.
ஜனவரி 23 : சரியான பெண் கிடைத்தால் திருமணம் செய்து கொள்வேன். அவர் அன்பானவராகவும், அறிவுக்கூர்மையுடனும் இருந்தால் போதும் என்று காங்கிரஸ் முன்னாள் தலைவர் ராகுல்காந்தி கூறினார்.
ஜனவரி 23 : கர்நாடகாவில் ஹிஜாப் அணிய தடை விதிக்கப்பட்டது தொடர்பான மேல்முறையீட்டு மனுக்களை 3 நீதிபதிகள் அமர்வு அவசரமாக விசாரிக்கும் என்று சுப்ரீம் கோர்ட்டு ஒப்புதல் அளித்துள்ளது.
ஜனவரி 23 : ‘தமிழகம்’ என அழைத்ததால் சர்ச்சை எழுந்ததைத் தொடர்ந்து கவர்னர் மாளிகையில் இருந்து வெளியான அழைப்பிதழில் ‘தமிழ்நாடு கவர்னர்’ என்ற சொல்லுடன் தமிழ்நாடு அரசின் இலச்சினையும் இடம் பெற்றது.
ஜனவரி 23 : சென்னை விமான நிலையத்தில் ரூ.10 கோடியில் 135 அடி உயரத்தில் தகவல் தொடர்பு கோபுரம் அமைக்கப்பட்டு உள்ளது.
ஜனவரி 23 : புதுச்சேரியில் குடும்ப தலைவிகளுக்கு மாதந்தோறும் ரூ.1,000 வழங்கும் திட்டத்தைக் கவர்னர் தமிழிசை, முதல்-அமைச்சர் ரங்கசாமி தொடங்கி வைத்தனர்.
ஜனவரி 24 : சொத்துக் குவிப்பு வழக்கில் முன்னாள் முதல்-அமைச்சர் ஜெயலலிதாவின் பொருட்களை ஏலம் விட வேண்டும் என்று கர்நாடக அரசுக்குப் பெங்களூரு கோர்ட்டு உத்தரவிட்டுள்ளது.
ஜனவரி 24 : சிறப்பு பொருளாதார மண்டல பகுதிக்குள் வாரத்தில் 2 நாட்கள் மட்டும் சுருக்குமடி வலைகளைப் பயன்படுத்தி மீன் பிடிக்கலாம் என்று சுப்ரீம் கோர்ட்டு இடைக்கால அனுமதி வழங்கியது.
ஜனவரி 24 : விமான நிலையம்-கிளாம்பாக்கம் இடையே மெட்ரோ ரெயில் திட்டத்திற்குத் தமிழக அரசுக்குப் பரிந்துரை செய்யப்பட்டுள்ளதாக அதிகாரிகள் தெரிவித்து உள்ளனர்.
ஜனவரி 24 : சுப்ரீம் கோர்ட்டு தீர்ப்புகளை இந்தி, தமிழ், குஜராத்தி, ஒடியா ஆகிய 4 பிராந்திய மொழிகளில் மொழியாக்கம் செய்ய நீதிபதி ஏ.எஸ்.ஓகா தலைமையில் குழு அமைக்கப்பட்டுள்ளது.
ஜனவரி 25 : உத்தரபிரதேச முன்னாள் முதல்-மந்திரி முலாயம் சிங் யாதவ் மற்றும் எஸ்.எம்.கிருஷ்ணாவுக்கு பத்மவிபூஷண் விருது அறிவிக்கப்பட்டு உள்ளது. இதைப் போல தமிழகத்தைச் சேர்ந்த பாடகி வாணி ஜெயராம் மற்றும் பாம்புபிடி வீரர்களுக்குப் பத்மஸ்ரீ விருதுகள் அறிவிக்கப்பட்டு உள்ளன.
ஜனவரி 25 : தமிழகத்தில் குட்கா, பான்மசாலாவுக்குத் தடை இல்லை என்றும், இது தொடர்பாக அரசின் உத்தரவை ரத்து செய்தும் சென்னை ஐகோர்ட்டுத் தீர்ப்பு அளித்துள்ளது.
ஜனவரி 25 : தமிழ்நாடு அனைத்துத் துறைகளிலும் முன்னணியில் இருக்கிறது எனத் தேசிய வாக்காளர் தின விழாவில் கவர்னர் ஆர்.என்.ரவி கூறினார்.
ஜனவரி 25 : மாநிலங்கள் கடன் வாங்குவதில் மத்திய அரசு தலையிடுவதாகப் பீகார் முதல்-மந்திரி நிதிஷ்குமார் குற்றம் சாட்டி உள்ளார்.
ஜனவரி 26 : தங்கம் விலை 2½ ஆண்டுகளுக்குப் பிறகு ஒரு பவுன் ரூ.43 ஆயிரத்தைக் கடந்து இருக்கிறது. ஏற்கனவே இருக்கும் உச்சத்தைத் தாண்டி புதிய உச்சத்தைத் தொடுவதற்கு வாய்ப்பு இருப்பதாகக் கூறப்படுகிறது.
ஜனவரி 26 : டெல்லியில் கோலாகலமாக நடை பெற்ற குடியரசு தினவிழாவில் ஜனாதிபதி முர்மு தேசியக் கொடி ஏற்றினார். சிறப்பு விருந்தினராக எகிப்து அதிபர் சிசி கலந்து கொண்டார்.
ஜனவரி 26 : சென்னை-பெங்களூரு இடையேயான 96.1 கி.மீ. தூரத்துக்கான விரைவு சாலை அமைக்கும் பணிகளில் 15 சதவீதம் பணிகள் நிறைவு பெற்று இருப்பதாக இந்திய தேசிய நெடுஞ்சாலை ஆணையம் தெரிவித்து இருக்கிறது.
ஜனவரி 26 : ஏகனாபுரம், நெல்வாய் கிராமசபைக் கூட்டங்களில் பரந்தூர் விமான நிலையம் அமைக்க எதிர்ப்பு தெரிவித்து 4-வது முறையாகத் தீர்மானம் நிறைவேற்றப்பட்டது.
ஜனவரி 27 : இடைத்தேர்தலைத் தொடர்ந்து இரட்டை இலைச் சின்னத்தை தங்களுக்கு வழங்கக்கோரி சுப்ரீம் கோர்ட்டில் எடப்பாடி பழனிசாமி தரப்பினர் முறையிட்டு உள்ளனர். இது தொடர்பாகத் தேர்தல் ஆணையத்துக்கு உத்தரவிட வேண்டும் என்றும் அவர்கள் கோரிக்கை வைத்தனர்.
ஜனவரி 27 : மலைப்பகுதிகளில் உள்ள டாஸ்மாக் மதுக்கடைகளில் காலி மதுபாட்டில்கள் திரும்ப பெறும் திட்டத்தைத் தீவிரமாக அமல்படுத்தியதற்காகத் தமிழ்நாடு அரசுக்கு ஐகோர்ட்டு பாராட்டு தெரிவித்துள்ளது.
ஜனவரி 27 : தமிழகப் பொதுத்துறை நிறுவனங்களின் செயல்பாடுகளைக் கண்காணிப்பதற்காக உருவாக்கப்பட்டுள்ள புதிய வலைத்தளத்தை முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் தொடங்கி வைத்தார்.
ஜனவரி 27 : கச்சத் தீவு புனித அந்தோணியார் ஆலயத் திருவிழா மார்ச் 3, 4-ந்தேதிகளில் நடைபெறுகிறது. தமிழகத்தில் இருந்து 3,500 பேர் பங்கேற்க அனுமதி அளிக்கப்பட்டு உள்ளது.
ஜனவரி 27 : புதிய வாக்காளர்களுக்கு அடையாள அட்டை வழங்குவதில் ஈரோடு கிழக்கு தொகுதிக்கு முன்னுரிமை அளிக்க வேண்டும் என்று இந்திய தேர்தல் கமிஷன் உத்தரவிட்டுள்ளது.
ஜனவரி 28 : பேஸ்புக், டுவிட்டர் உள்ளிட்ட சமூக ஊடகங்களுக்குக் கடிவாளம் போடும் வகையில் 3 குழுக்களை மத்திய அரசு அமைத்துள்ளது.
ஜனவரி 28 : குரூப்-3 ஏ பணிகளில் உள்ள 15 காலியிடங்களுக்கான தேர்வை 98 ஆயிரம் பேர் எழுத விண்ணப்பித்ததில், 44 ஆயிரத்து 321 பேர் மட்டுமே எழுதினார்கள். அதன்படி, ஒரு இடத்துக்கு 2 ஆயிரத்து 954 பேர் போட்டியிடுகின்றனர்.
ஜனவரி 28 : மக்களைத் தேடி மருத்துவ திட்டத்தின் மூலம் 1 கோடிக்கும் மேற்பட்டவர்களிடம் மருந்து பெட்டகங்கள் சென்று சேர்ந்துள்ளன என்று அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் கூறினார்.
ஜனவரி 28 : ‘ஏ' சான்றிதழ் பெற்ற படங்களைப் பார்க்க குழந்தைகளை அனுமதிக்கக்கூடாது என்ற கோரிக்கையைத் தணிக்கை வாரியம் பரிசீலிக்க வேண்டும் என்று சென்னை ஐகோர்ட்டு உத்தரவிட்டுள்ளது.
ஜனவரி 28 : ஜனாதிபதி மாளிகையில் உள்ள முகலாயத் தோட்டம் (முகல் கார்டன்), அமிர்தத் தோட்டம் எனப் பெயர் மாற்றப்பட்டு உள்ளது.
ஜனவரி 22 : அமெரிக்க ஜனாதிபதி ஜோ பைடனின் வீட்டில் எப்.பி.ஐ. அதிகாரிகள் அதிரடி சோதனை நடத்தினர். இது அங்கு பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.
ஜனவரி 24 : நேபாளத்தில் சக்திவாய்ந்த நிலநடுக்கம் ஏற்பட்டது. ஒரு பெண் பலியானார். டெல்லி, ராஜஸ்தான் ஆகிய மாநிலங்களிலும் அதிர்வு உணரப்பட்டது.
ஜனவரி 24 : பாகிஸ்தானில் ஏற்பட்ட மின்வெட்டுக்கு மக்களிடம் பிரதமர் ஷபாஸ் ஷெரீப் மன்னிப்பு கேட்டார்.
ஜனவரி 25 : வடகொரியாவில் கொரோனா தொற்று அதிகரிப்பால் அந்த நாட்டின் தலைநகரில் ஊரடங்கு அமல்படுத்தப்பட்டது.
ஜனவரி 26 : பாகிஸ்தானில் ஏற்பட்டுள்ள கடும் பொருளாதார நெருக்கடி காரணமாக அரசு ஊழியர்கள் சம்பளத்தை 10 சதவீதம் குறைக்கப் பரிசீலனை செய்யப்பட்டுள்ளது.
ஜனவரி 26 : உளவு செயற்கைக்கோளை ஜப்பான் விண்ணில் செலுத்தியது.
ஜனவரி 26 : கொரோனா பலிகள் 80 சதவீதம் குறைந்து விட்டது எனச் சீனா சொல்கிறது.
ஜனவரி 26 : சர்வதேச நிதியத்திடம் கடன் உத்தரவாதம் வழங்கிய இந்தியாவுக்கு, இலங்கை நன்றி தெரிவித்தது.
ஜனவரி 27 : காசா-இஸ்ரேல் இடையே மீண்டும் மோதல் வெடித்துள்ளது. இது முழு அளவிலான போராக உருவெடுக்கும் அபாயம் எழுந்துள்ளது.
ஜனவரி 22 : உலகக் கோப்பை ஆக்கியில் கால்இறுதிக்கு முந்தைய 2-வது சுற்றில் இந்திய அணி பெனால்டி ஷூட்-அவுட்டில் நியூசிலாந்திடம் தோற்று போட்டியை விட்டு வெளியேறியது.
ஜனவரி 22 : ஆஸ்திரேலிய ஓபன் டென்னிஸ் போட்டியில் ‘நம்பர் ஒன்’ வீராங்கனைப் போலந்தின் ஸ்வியாடெக் 4-வது சுற்றில் அதிர்ச்சிகரமாகத் தோற்று வெளியேறினார்.
ஜனவரி 22 : இந்திய ஓபன் பேட்மிட்டன் போட்டியில் ஆண்கள் பிரிவில் தாய்லாந்தின் குன்லாவத், பெண்கள் பிரிவில் தென்கொரியாவின் அன்சே யங் ‘சாம்பியன்’ பட்டம் வென்றனர்.
ஜனவரி 24 : கடைசி ஒருநாள் கிரிக்கெட் போட்டியிலும் நியூசிலாந்தை வீழ்த்திய இந்திய அணி தொடரை 3-0 என்ற கணக்கில் முழுமையாக வசப்படுத்தியது.
ஜனவரி 24 : ஐ.சி.சி. சிறந்த டெஸ்ட் கிரிக்கெட் அணியில் இந்திய வீரர் ரிஷப் பண்டுக்கு இடம் கிடைத்துள்ளது.
ஜனவரி 25 : பெண்கள் ஐ.பி.எல். கிரிக்கெட் போட்டிக்கான அணிகள் மொத்தம் ரூ.4,670 கோடிக்கு விற்பனை ஆனது. அதிகபட்சமாக ஆமதாபாத் அணியை ரூ.1,289 கோடிக்கு அதானி குழுமம் வாங்கியது.
ஜனவரி 25 : ஒருநாள் கிரிக்கெட் போட்டியின் பந்து வீச்சாளர்கள் தர வரிசையில் இந்திய வேகப்பந்து வீச்சாளர் முகமது சிராஜ் முதல்முறையாக ‘நம்பர் ஒன்’ இடத்தைப் பிடித்துள்ளார்.
ஜனவரி 25 : ஐ.சி.சி. 20 ஓவர் கிரிக்கெட் போட்டியின் சிறந்த வீரராகச் சூர்யகுமார் யாதவ் தேர்வு செய்யப்பட்டார்.
ஜனவரி 26 : தமிழ்நாடு கிரிக்கெட் சங்கம் சார்பில் திறமையான பந்து வீச்சாளர்களைக் கண்டறிந்து அவர்களுக்குச் சிறப்பு பயிற்சி அளிக்கும் திட்டம் அறிமுகம் செய்யப்பட்டுள்ளது. இதனை இந்திய கிரிக்கெட் வீரர் அஸ்வின் தொடங்கி வைத்தார்.
ஜனவரி 27 : நியூசிலாந்துக்கு எதிரான முதலாவது 20 ஓவர் கிரிக்கெட்டில் இந்திய அணி 21 ரன் வித்தியாசத்தில் தோல்வி அடைந்தது.
ஜனவரி 27 : ஆஸ்திரேலிய ஓபன் டென்னிஸ் போட்டியில் கலப்பு இரட்டையர் பிரிவின் இறுதி ஆட்டத்தில் இந்தியாவின் சானியா மிர்சா - ரோகன் போபண்ணா இணை தோல்வி அடைந்தது.
ஜனவரி 27 : உலகக்கோப்பை ஆக்கிப்போட்டியில் ஆஸ்திரேலியா அரை இறுதியில் வெளியேற்றப்பட்டது.
ஜனவரி 28 : ஆஸ்திரேலிய ஓபன் டென்னிஸ் போட்டியில் பெண்கள் ஒற்றையர் பிரிவில் பெலாரஸ் வீராங்கனை சபலென்கா முதல் முறையாகச் சாம்பியன் பட்டம் வென்றார்.
வீரமாமுனிவர்
திருக்குறள், தேவாரம், திருப்புகழ், நன்னூல், ஆத்திசூடி ஆகிய நூல்களை பிற மொழிகளில் மொழி பெயர்த்தவர் வீரமா முனிவர். இவர் தமிழ் மொழியின் வளர்ச்சிக்கும், முன்னேற்றத்திற்கும் சிறப்பான பணிகளைச் செய்துள்ளார். தமிழகத்தில் வாழ்ந்த புலவர்களுள் பல்துறை வித்தகராகத் திகழ்ந்தவர் வீரமாமுனிவரே.
பின்னர், அப்பெயர் வடமொழி என்பதாலும், நன்கு தமிழ் கற்றதாலும், தமது இயற்பெயரின் பொருளைத் தழுவி, செந்தமிழில் வீரமாமுனிவர் என மாற்றிக் கொண்டார். இவர் தமிழகம் வந்தபின், சுப்ரதீக் கவிராயரிடம் தமிழ் இலக்கண, இலக்கியம் கற்று இலக்கிய பேருரைகள் நடத்துமளவுக்குப் புலமை பெற்றார்.
இலக்கியச் சுவடிகைளைப் பல இடங்களுக்குச் சென்று தேடி எடுத்ததால், சுவடி தேடும் சாமியார் எனவும் அழைக்கப்பட்டார். இவற்றில் காண அரிதான பல பொக்கிஷங்கள் அழிக்கப்பட்டதாகவும் கூறப்படுகிறது.
தமிழின் சிறப்பை மேல் நாட்டார் உணர திருக்குறள், தேவாரம், திருப்புகழ், நன்னூல், ஆத்திசூடி போன்ற நூல்களை பிற ஐரோப்பிய மொழிகளில் வெளியிட்டார்.
தமிழ் கற்க எதுவாக தமிழ் - லத்தீன் அகராதியை உருவாக்கினார். அதில் 1000 தமிழ்ச் சொற்களுக்கு லத்தீன் விளக்கம் அளிக்கப்பட்டது. இதுவே முதல் தமிழ் அகரமுதலி ஆகும். பின்பு 4400 சொற்களைக் கொண்ட தமிழ்-போத்துக்கீய அகராதியை உருவாக்கினார். திருக்காவலூர்த் திருத்தலத்தையும், ஏலாக்குறிச்சியில் உள்ள அடைக்கலமாதாவையும் போற்றும் வண்ணம் "திருக்காவலூர் கலம்பகம்" பாடியுள்ளார்.
பல பெயர்களைக் கண்ட பொருட்களின் பெயர்ச் சொற்களைத் தொகுத்துப் 'பெயரகராதி' எனவும், பொருள்களின் பெயர்களைத் தொகுத்து 'பொருளகராதி' எனவும் சொற்கள் பலவாகக் கூடிநின்று ஒரு சொல்லாக வழங்குவதைத் தொகுத்துத் 'தொகையராதி' எனவும், எதுகை மற்றும் ஓசை ஒன்றாக வரும் சொற்களை வரிசைப்படுத்தித் 'தொடையகராதி' எனவும் அமைத்துத் தமிழுக்குச் செழுமை சேர்த்தவர்! 'சதுரகராதி' கண்ட பெருமையும் வீரமாமுனிவரையே சாரும். தமிழ் மொழியில் தோன்றிய நிகண்டுகளில் சிறப்பான இடத்தைப் பெற்றுள்ளது இந்தச் 'சதுரகராதி'. ஒரு மொழி அகராதி சதுரகராதி, இரு மொழி அகராதி-தமிழ்-இலத்தீன்-அகராதி. மூன்று மொழி அகராதி போர்த்துக்கீஸ்-இலத்தீன்-தமிழ்-அகராதி உருவாக்கியதால், "தமிழ் அகராதியின் தந்தை" எனப் போற்றப்பட்டார்.
சதுரகாதியை, நிகண்டுக்கு ஒரு மாற்றாகக் கொண்டு வந்தார். அக்காலத்தில் சுவடிகளில் தமிழில் உயிர் எழுத்துக்களின் அருகில் ர சேர்த்தும் (அ:அர, எ:எர) . உயிர்மெய் எழுத்துகளின் மேல் குறில் ஒசைக்குப் புள்ளி வைத்துக்கொண்டிருந்தார்கள். அவைகளின் நெடில் ஓசைக்கு புள்ளி வைக்காமல் விட்டார்கள். தொல்காப்பியக் காலத்திலிருந்து வழங்கி வந்த இந்தப் பழைய முறையை 18 ஆம் நூற்றாண்டின் தொடக்கத்தில் வீரமாமுனிவர் மாற்றி “ஆ, ஏ” எனவும், நெட்டெழுத்துக் கொம்பை மேலே சுழித்தெழுதும் ( கே ,பே ) வழக்கத்தை உண்டாக்கினார். தமிழ் இலக்கிய இலக்கணங்கள் கவிதை வடிவில் இருந்து வந்தன. அவற்றை மக்கள் எளிதில் படித்தறிய முடியவில்லை என்பதனை அறிந்து உரைநடையாக மாற்றியவர் இவர்.திருக்காவலூரில் ஒரு கல்லூரியை ஆரம்பித்து அதில் தாமே தமிழாசிரியராக இருந்து இலக்கணம் கற்பித்தார்.
தமிழ் படைப்புகள்:
- தொன்னூல் விளக்கம் என்ற நூலில் எழுத்து, சொல், பொருள், யாப்பு, அணி ஆகிய ஐந்து இலக்கணங்களைத் தொகுத்தார் .
- கொடுந்தமிழ் இலக்கணம் என்ற நூலில், தமிழில் முதல் முதலாகப் பேச்சுத் தமிழை விவரிக்க முனைந்தார்.
- திருக்குறளில் அறத்துப்பாலையும், பொருட்பாலையும் இலத்தீன் மொழியில் மொழி பெயர்த்தவர் வீரமாமுனிவர்.
- உரைநடையில் வேத விளக்கம், வேதியர் ஒழுக்கம், ஞானக் கண்ணாடி, செந்தமிழ் இலக்கணம், பரமார்ந்த குருவின் கதை, வாமன் கதை ஆகிய நூல்களைப் படைத்தவர்.
- திருக்காவலூர்க் ஊர்க் கலம்பகம், கித்தேரி அம்மன் அம்மானை இவரது பிற நூல்கள்.
- 1728 - புதுவையில் இவரின் பரமார்த்த குருவின் கதை என்ற நூல் முதல் முறையாக இவரால் அச்சியிடப்பட்டு வெளியிடப்பட்டது. இந்த நகைச்சுவைக் கதைகள் Jean de la Fontaine (1621-1695) எனும் பிரன்சியரால் எழுதப்பட்டது. ஐரோப்பாவில் பிரபலமாக இருந்ததை பெஸ்கி தமிழிலும் மொழிபெயர்த்தார் என்று சிலர் கருதுகின்றனர். இது தமிழில் முதல் முதலாக வந்த நகைச்சுவை இலக்கியம் ஆகும்.
- காவியத்தில் தேம்பாவணி இவர் இயற்றியது.
- தேம்பாவணி மூன்று காண்டங்களில் 36 படலங்களைக் கொண்டு மொத்தமாக 3615 விருத்தப் பாக்களால் ஆனது.
- முத்துசாமிப் பிள்ளை வீரமாமுனிவரின் வாழ்க்கை வரலாற்றை 1822 இல் எழுதி, அந்நூலை அவரே ஆங்கிலத்தில் மொழி பெயர்த்து 1840 இல் வெளியிட்டார்.
- தமிழில் அமைந்த காப்பியங்களிலேயே, தமிழைத் தாய்மொழியாகக் கொள்ளாத வெளிநாட்டவர் ஒருவரால் இயற்றப்பட்டது எனும் பெருமை தேம்பாவணிக்கே உண்டு. மேலும் வீரமாமுனிவரைப் போல, வேறெந்தக் காப்பியப் புலவரும் சிற்றிலக்கியம், அகராதி, இலக்கணம் உரைநடை எனப் பிற இலக்கிய வகைகளில் நூல்கள் படைத்தாரல்லர்.
- 23 நூல்களைத் தமிழில் எழுதியதுடன், இயேசுக் கிறித்துவின் வாழ்க்கை தொடர்பான நிகழ்ச்சிகளையும் இயேசுவின் வளர்ப்புத் தந்தையாகிய புனித யோசேப்பின் வரலாற்றையும் தமிழ்ப் பண்பாட்டுக் கேற்ப தேம்பாவணி என்ற பெருங்காவியமாக இயற்றியது இவரின் தமிழ்ப் புலமைக்குச் சான்றாக உள்ளது.
- 'தேம்பாவணி' காப்பியத்தை இயற்றியதற்காக வீரமாமுனிவருக்கு, `செந்தமிழ்த் தேசிகர்' என்னும் பட்டம் வழங்கப்பட்டது.
தமிழகத்தில் வாழ்ந்த புலவர்களுள் பல்துறை வித்தகராகத் திகழ்ந்தவர் வீரமாமுனிவரே! இலக்கண அறிவு, இலக்கியப் புலமை, மொழியியல் உணர்வு, பக்தி இலக்கிய ஆற்றல், ஆய்வியற் சிந்தனை, பண்பாட்டில் தோய்வு எனப் பல்வகையிலும் சிறந்தவர்! அவர்தம் திறமையைப் பயன்படுத்தித் தமிழுக்கு வீரமாமுனிவர் ஆற்றியுள்ள பணிகள் தமிழக வரலாற்றில் என்றும் நிலைத்து நிற்கும். தமிழுக்காகவே வாழ்ந்து தொண்டு செய்து புகழ் எய்திய வீரமாமுனிவர் 04.02.1747ஆம் நாள் அம்பலக்காட்டு குருமடத்தில் இயற்கை எய்தினார்.
Monday, January 30, 2023
ஆம்ஃபிடோகி | Amphitoky
ஆம்ஃபிடோகி என்றால் என்ன?
இவ்வகை கன்னி இனப்பெருக்கத்தில், அண்ட செல் வளர்ச்சியுற்று ஆண் அல்லது பெண் உயிரியாக உருவாகின்றது. எடுத்துக்காட்டு : ஏஃபிஸ்.
What is Amphitoky ?
In this type parthenogenetic, egg may develop into individuals of any sex. Example : Aphis.
தெலிடோகி | Thelytoky
தெலிடோகி என்றால் என்ன?
இவ்வகை கன்னி இனப்பெருக்கத்தில், பெண் உயிரிகள் மட்டுமே உருவாக்கப்படுகின்றன. எடுத்துக்காட்டு : சொலனோபியா.
What is Thelytoky ?
In this type of parthenogenesis, only females are produced by parthenogenesis. Example : Solenobia.
அர்ரீனோடோகி | Arrhenotoky
அர்ரீனோடோகி என்றால் என்ன ?
இவ்வகை கன்னி இனப்பெருக்கத்தில், ஆண் உயிரிகள் மட்டுமே உருவாக்கப்படுகின்றன. எடுத்துக்காட்டு : தேனீக்கள்.
What is Arrhenotoky ?
In this type, only males are produced by parthenogenesis. Example : Honey bees.
இளம் உயிரி கன்னி இனப்பெருக்கம் | Paedogenetic parthenogenesis
இளம் உயிரி கன்னி இனப்பெருக்கம் என்றால் என்ன?
இளம் உயிரி கன்னி இனப்பெருக்கத்தில் இளவுயிரியே கன்னி இனப்பெருக்கத்தின் மூலம் புதிய தலைமுறை இளவுயிரிகளை உருவாக்குகிறது. கல்லீரல் புழுவின் ஸ்போரோோரோசிஸ்ட்டுகள் மற்றும் ரீடியா லார்வாக்கள் இவ்வகையில் இனப்பெருக்கம் செய்கின்றன. சிலவகைப் பூச்சிகளின் லார்வாக்களிலும் இது நடைபெறுகிறது. எ.கா. மொழுக்கு ஈ.
What is Paedogenetic parthenogenesis ?
In paedogenetic parthenogenesis (paedogenesis) the larvae produce a new generation of larvae by parthenogenesis. It occurs in the sporocysts and Redia larvae of liver fluke. It is also seen in the larvae of some insects. e.g. Gall fly.
கன்னி இனப்பெருக்கம் | Parthenogenesis
கன்னி இனப்பெருக்கம் என்றால் என்ன?
அண்ட செல்லானது, கருவுறாமலேயே முழு உயிரியாக வளர்ச்சி அடையும் செயலுக்கு கன்னி இனப்பெருக்கம் என்று பெயர்.
What is Parthenogenesis ?
Development of an egg into a complete individual without fertilization is known as parthenogenesis.
முதுமை நிலை | Senescent phase
முதுமை நிலை என்றால் என்ன?
இனப்பெருக்க நிலை முடியும் காலத்தில் ஒரு உயிரியின் உடல்டல் அமைப்பிலும் செயல்பாடுகளிலும் சிதைவு ஏற்படத் தொடங்கும் நிலை முதுமை நிலை எனப்படும்.
What is Senescent phase ?
Senescent phase begins at the end of reproductive phase when degeneration sets in the structure and functioning of the body.
தொடர்ச்சியான இனச் சேர்க்கையாளர்கள் | Continuous breeders
தொடர்ச்சியான இனச் சேர்க்கையாளர்கள் என்றால் என்ன?
பால் முதிர்ச்சிக் காலம் முழுவதும் இனச்சேர்க்கையில் ஈடுபடும் உயிரிகள் தொடர்ச்சியான இனச் சேர்க்கையாளர்கள் ஆகும். எ.கா: தேனீக்கள், வளர்ப்புப் பறவைகள், முயல்கள் போன்றவை.
What is Continuous breeders ?
Continuous breeders continue to breed throughout their sexual maturity e.g. honey bees, poultry, rabbit etc.,
பருவ கால இனச்சேர்க்கையாளர்கள் | Seasonal breeders
பருவ கால இனச்சேர்க்கையாளர்கள் என்றால் என்ன?
ஒரு ஆண்டின் குறிப்பிட்ட காலத்தில் மட்டும் இனச்சேர்க்கையில் ஈடுபடும் உயிரிகள் பருவ கால இனச்சேர்க்கையாளர்கள் எனப்படும். எ.கா: தவளைகள், பல்லிகள், பெரும்பாலான பறவைகள், மான்கள் போன்றவை.
What is Seasonal breeders?
Seasonal breeders reproduce at particular period of the year such as frogs, lizards, most birds, deers etc.,
Popular Posts
-
சுயமரியாதை இயக்கம் யாரால் துவங்கப்பட்டது - தந்தை பெரியார் தந்தை பெரியார் எப்போது காங்கிரஸில் இணைந்தார் - 1919 (காந்தியின் கொள்கைகளை பரப...
-
இந்தியாவில் முதற்கட்ட நகரமயமாக்கத்தின் சின்னம் சிந்து நாகரிகமாகும். சிந்து பகுதியில் நாகரிகம் உச்சத்தில் இருந்தபோது, நாம் இதுவரை விவாதித்த...
-
குப்தப் பேரரசு : காலம் : கிபி 300- 700. ஆட்சி பகுதி : மகதம், அலகாபாத் மற்றும் அவுத். தலைநகர் : பாடலிபுத்திரம். இந்தியாவின் பொற்காலம் ...
-
வளர்ச்சியை மேலும் அதிகப்படுத்தும் பொருட்டு சென்னை வட்டார பகுதிகளைத் தவிர, இரண்டடுக்கு (Tier-II) நகரங்களான கோயம்புத்தூர், மதுரை, திருச்சிராப...
-
எட்டுத்தொகை நூல்கள் : எட்டுத்தொகை நூல்களை “எண்பெருந்தொகை” எனவும் வழங்குவர். எட்டுத்தொகை நூல்கள் மொத்தம் எட்டு. இதன் நூல் பெயர்களை பழம...
-
நற்றிணையைத் தொகுப்பித்தவர் யார் - பாண்டியன் மாறன் வழுதி. நற்றிணைப் பாடல்களைப் பாடிய புலவர்களின் எண்ணிக்கை - 176. நற்றிணையைத் தொ...
-
நூல் குறிப்பு : திரு十 குறள்➝ சிறந்தக் குறள் வெண்பாக்களினால் ஆகிய நூல் குறள் ➝இரண்டடி வெண்பா திரு ➝சிறப்பு அடைமொழி குறள் 80 குறட்பா...
-
சிந்து சமவெளி நாகரிகம் /ஹரப்பா நாகரிகம் : பழைய கற்காலம்- கி.மு 10,000 முன்பு. புதிய கற்காலம் கி.மு 10000 - 4000. செம்பு கற்காலம் கி.ம...
-
நான்மணிக்கடிகையின் உருவம்: ஆசிரியர் = விளம்பி நாகனார் ஊர் =விளம்பி பாடல்கள் = 2 + 104 பாவகை = வெண்பா பெயர்க்காரணம்: நான்கு + ம...
-
லோக்பால் என்றால் என்ன? ( OIMBUDSMAN) லோக்பால் என்பது ஊழல், பொதுமக்கள் பணம் கையாடல் முதலிய தவறிழைக்கும் அரசியல்வாதிகள் மற்றும் அரசு உயர...