TAMIL G.K 1381-1400 | TNPSC | TRB | TET | 100 அறிந்து கொள்ள வேண்டிய பொது அறிவு தகவல்கள் | கல்விச்சோலை தகவல் களஞ்சியம்
1381.10-ஆம் வகுப்பு | தமிழ் |“தமிழ் இலக்கணம் படிக்கப் படிக்க விருப்பத்தை உண்டாக்குவது” இது யாருடைய கூற்று?
Answer | Touch me
கெல்லட்
1382.10-ஆம் வகுப்பு | தமிழ் |தொல்காப்பியத்தை எழுதியவர் யார்?
Answer | Touch me
தொல்காப்பியர்
1383.10-ஆம் வகுப்பு | தமிழ் |தொல்காப்பியரின் ஆசிரியர் யார்?
Answer | Touch me
அகத்தியர்
1384.10-ஆம் வகுப்பு | தமிழ் |அகத்தியர், எழுத்து, சொல், பொருள், யாப்பு, அணி ஆகிய ஐந்து இலக்கணங்களையும் எழுதியுள்ளார். அதற்கு பெயர் என்ன?
Answer | Touch me
அகத்தியம்
1385.10-ஆம் வகுப்பு | தமிழ் |“அரசியல் பிழைத்தோர்க்கு அறம் கூற்றாகும்” என்னும் அறநெறியை உலகாள்வோர்க்கு உணர்த்தும் நூல் எது?
Answer | Touch me
சிலப்பதிகாரம்
1386.10-ஆம் வகுப்பு | தமிழ் |“இன்றைய மொழியியல் வல்லுநர்கள் பேணிப் பின்பற்றத்தக்க வழிமுறைகளைத் தொல்காப்பியம் கூறுகின்றது” இது யாருடைய கூற்று?
Answer | Touch me
முனைவர் எமினோ
1387.10-ஆம் வகுப்பு | தமிழ் |ஒரு மொழிக்கு முப்பத்து மூன்று ஒலிகள் இருந்தாலே போதும் என்பர், ஆனால், தமிழோ எத்தனை ஒலிகளைக் கொண்டு உள்ளது?
Answer | Touch me
ஐந்நூறு
1388.10-ஆம் வகுப்பு | தமிழ் |தமிழைச் செம்மொழி என அறிவிக்க வேண்டும் என்ற முயற்சி எப்போது தொடங்கி தொடர்ந்தது?
Answer | Touch me
1901-இல் தொடங்கி 2004 வரை தொடர்ந்தது
1389.10-ஆம் வகுப்பு | தமிழ் |தமிழுக்கு செம்மொழி அந்தஸ்து நடுவணரசால் எப்போது வழங்கப்பட்டது?
Answer | Touch me
2004-ஆம் ஆண்டு அக்டோபர்
1390.10-ஆம் வகுப்பு | தமிழ் |இன்றைய மதுரையில் _____ தமிழ்ச் சங்கம் இருந்தது?
Answer | Touch me
மூன்றாம்
1391.10-ஆம் வகுப்பு | தமிழ் |மேலைச் சிவபுரிச் சன்மார்க்க சபை, எந்த ஆண்டு தமிழைச் செம்மொழியாக அறிவிக்க வேண்டி தீர்மானம் நிறைவேற்றி இந்திய அரசுக்கும், பல்கலைக்கழகங்களுக்கும் அனுப்பியது?
Answer | Touch me
கி.பி. 1918-ஆம் ஆண்டு
1392.10-ஆம் வகுப்பு | தமிழ் |கி.பி. 1918-இல் நடந்த எந்த மாநாட்டில் தமிழைச் செம்மொழியாக அறிவிக்க வேண்டுமெனத் தீர்மானம் நிறைவேற்றியது?
Answer | Touch me
சைவ சித்தாந்த மாநாட்டில்
1393.10-ஆம் வகுப்பு | தமிழ் |கி.பி.1919-இல் எச்சங்கம் தமிழைச் செம்மொழியாக அறிவிக்க வேண்டுமெனத் தீர்மானம் நிறைவேற்றியது?
Answer | Touch me
கரந்தைத் தமிழ்ச்சங்கம்
1394.10-ஆம் வகுப்பு | தமிழ் |கி.பி. 1966-இல் “உயர்தனிச் செம்மொழி” என்னும் ஆங்கில நூல் யாரால் எழுதி வெளியிடப்பட்டது?
Answer | Touch me
தேவநேயப்பாவாணரால்
1395.10-ஆம் வகுப்பு | தமிழ் |செம்மொழித் தகுதிப்பாடுகள் பதினொன்றை வரையறுத்த அறிவியல் தமிழறிஞர்கள் யார்?
Answer | Touch me
பரிதிமாற்கலைஞர்
1396.10-ஆம் வகுப்பு | தமிழ் |தமிழ் பயிலும் ஆர்வம்மிக்க மாணவர் களுக்குத் தம்முடைய இ;ல்லத்திலேயே தமிழ் கற்பித்தலுடன், அவர்களை _____ எனவும் பெயரிட்டு அழைத்தார்.
Answer | Touch me
இயற்றமிழ் மாணவர்கள்
1397.10-ஆம் வகுப்பு | தமிழ் |பரிதிமாற் கலைஞர் எந்த தமிழ்ச்சங்கம் நிறுவ உறுதுணை புரிந்தார்?
Answer | Touch me
நான்காம் தமிழ்ச்சங்கம்
1398.10-ஆம் வகுப்பு | தமிழ் |யாழ்ப்பாணம் சி.வை.தாமோதரனார் பரிதிமாற்கலைஞருக்கு கொடுத்த பட்டம் எது?
Answer | Touch me
திராவிட சாஸ்திரி
1399.10-ஆம் வகுப்பு | தமிழ் |_______என்னும் நூலில் பெற்றோர் இட்ட சூரியநாராயண சாஸ்திரி என்னும் வடமொழிப் பெயரை மாற்றிப் பரிதிமாற் கலைஞர் எனப்பெயர் சூட்டிக் கொண்டார்.
Answer | Touch me
தனிப்பாசுரத்தொகை
1400.10-ஆம் வகுப்பு | தமிழ் |தனிப்பாசுரத் தொகையை ஆங்கிலத்தில் மொழிபெயர்த்தவர் யார்?
Answer | Touch me
ஜி.யு. போப்
No comments:
Post a Comment